Advertisement

சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை

சிங்கம்புணரி: சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகதீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று (அக்., 21ல்) வடுக பைரவர் பூஜை நடந்தது.

இக்கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. பைரவருக்கு 21 வகையான அபிஷேகங்கள் ரவி குருக்களால் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement