Advertisement

திருத்தளிநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பவுர்ணமி அன்னாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று காலை 10:30 மணிக்கு மூலவர் திருத்தளிநாதருக்கு பல வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிநாக வர்ண கோலத்தில் அன்ன அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அபிஷேக,ஆராதனையை தரிசித்தனர். பின்னர் அன்னத்துடன் புறப்பாடாகி சீதளிகுளக்கரையில்எழுந்தருளினர். மழைவேண்டியும், விவசாயம் செழிக்கவும், பசி பிணி தீரவும் வேண்டி அங்கு அன்னத்திற்கும், தீர்த்தத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் காய்கறிகள், மலர்கள், அன்னம் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவாக படைக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் சீதளியில் நீர் நிரம்பி அன்னாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Advertisement