Advertisement

தேனி கோயில்களில் பவுர்ணமி அன்னாபிஷேகம்

தேனி , ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர், பெத்தாட்சி விநாயகர், கணேசகந்த பெருமாள் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. பெரியகுளம் வடகரை தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில், வைத்தீஸ்வரருக்கு, அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜஅலங்காரத்தில் வைத்தீஸ்வரர் காட்சியளித்தார். ஏராளமானோர் தரிசித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.

*சின்னமனுார் சின்னமனுார் பூலாநந்திஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னத்தால்்அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக 25 படி அரிசியில் சாதம் தயாரித்து, மூலவருக்கு அர்ச்சகர் மகராஜ பட்டர் அன்னாபிஷேகம் செய்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின், சரிபாதி முல்லையாற்றில் கரைக்கப்பட்டது. மீதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கட்டளைதாரர் துர்கா.வஜ்ரவேல், கோயில் நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி முருகமலை பரமேஸ்வரன் கோயிலில் அன்னாபிஷேம் நடந்தது.தேவதானப்பட்டியில் மலைமீது பரமேஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் வடுகபட்டி உட்பட பலகிராமங்களில் இருந்து வந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* சில்வார்பட்டி முனையடுவார் கோயில், காசிலிங்கேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேம் நடந்தது.

*சில்வார்பட்டி காளியம்மன் கோயில் பவுர்ணமி பூஜை நடந்து. பக்தர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

* கம்பம்: சுருளி அருவில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதல் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பழவகைகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆயிரம் கிலோ அரிசி சாதம் படைக்கப்பட்டு, அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சுருளியாறு, முல்லைப்பெரியாறு, உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். சிறப்பு பூஜைகளை சிவனடியார் முருகன்சுவாமிகள் செய்திருந்தார்.

Advertisement
 
Advertisement