Load Image
Advertisement

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முருகர் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட முருகர் தேர் நேற்று வெள்ளோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் துவங்கும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, போலீசார் மோப்பநாய் தென்றல் உதவியுடன் கோவிலில் பல முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
* கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, திருவண்ணாமலை 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றும் ராட்சத கொப்பறைக்கு பயன்படுத்தப்படும் 4500 கிலோ நெய் திருவண்ணாமலை ஆவின் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

*திருவண்ணாமலையில், சென்னை சேர்ந்த அருணாச்சலம் ஆன்மீக சேவ சங்கம் சார்பில், கார்த்திகை தீபத் திருவிழாவில் சுவாமிகளுக்கு பயன்படுத்தப்படும் 09 திருக்குடைகளை வெகு விமரிசையாக மேளதாளத்து பக்தர்கள் மாட வீதி உலா வந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement