Load Image
Advertisement

திருவண்ணாமலை மகா தீபத்துக்கு வந்த 3,500 கிலோ நெய்

திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. டிச.,6ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும், 3,500 கிலோ நெய், திருவண்ணாமலை ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு, கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதேசமயம் நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் நேரடியாகவும், ஆன்லைனிலும் செலுத்தி வருகின்றனர். நேரடியாக நெய் காணிக்கை செலுத்த, கோவிலில் தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
மகா தீபத்திலிருந்து சேகரிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தன்று, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மற்றவர்களுக்கு ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement