Load Image
Advertisement

ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. உற்சாக மனப்பான்மை

கார்த்திகை: தடைக்கல்லும் படிக்கல்லாகும்

நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் ஆற்றலும் வாழ்க்கையில் வளமும் நலமும் அதிகம் பெறும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து விடும். தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி உயர்வு பெறுவீர்கள்.

இந்த வருடம் உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழுமையாக இருக்கும். பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். அரசுத்துறைகளின் ஆதரவும் தேவையான காலங்களில் சரியாகக் கிடைக்கும். உங்கள் வீட்டில் ஆன்மிகப் பணிபுரியும் அன்பர்களும் தெய்வீகத் தன்மை பொருந்திய சாதுக்களும் அவ்வப்போது வந்து செல்ல வாய்ப்புண்டு. குல தெய்வ வழிபாடுகளும் தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய நேர்த்திகடன்களும் சிறப்பாக நிறைவேறும்.
குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். அதன் பயனாக குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சுபவிஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவார்கள்.
அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் கடந்த காலத்தில் இருந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். செயல்பாடுகளில் தனித்த திறமையும், நண்பர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து மிகுந்த வெற்றி தரும்.
தங்கம், வெள்ளி, வைர நகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் தொழிலதிபர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். பித்தளை, எவர்சில்வர், அலுமினியம் போன்ற உலோகம் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் வியாபாரத்தில் உயர்வு பெறுவார்கள். சினிமா அரங்குகள், நாடக மேடைகள், திருமண மாளிகைகள் நடத்துவோர், மளிகைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள்.
அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்து குழந்தை பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்களை உருவாக்கும் பெண்கள் நிறை வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து சொத்துக்கள். வீட்டு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். சினிமா, சின்னத்திரை, நாடகம், விளம்பர மாடலிங் துறைகளில் பணிபுரியும் கலைஞர்கள் ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுவதில் அக்கறையுடன் செயல்படுவர்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத் தர எடுக்கும் முயற்சிகளோடு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தேவையான சவுகரியங்களைப் பெறுவதிலும் முனைப்பு காட்டுவர். தொண்டர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் முன்னின்று செயல்படுத்துவீர்கள். உங்கள் கோரிக்கைகள் முக்கியமானதாகக் கருதப்பட்டு உடனடியாக நிறைவேற்றி தரப்படும். கோயில் சார்ந்த திருப்பணிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு தெய்வ அருளைப் பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்பட்டு எதிரித்தனம் செய்வர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே உங்களுக்கு நிம்மதிக்கான வழிமுறையாக இருக்கும். அரசியல்ரீதியாக முக்கிய பொறுப்பு வகிப்போருக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும்.
பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் போற்றி நடந்து அவர்களின் ஆசியுடன் செயல்பட்டு முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் துறை மாணவர்கள் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித் தருவர். வக்கீல் தொழிலில் ஜூனியராக இருந்து பயிற்சி பெறுவோர் தகுந்த சமயத்தில் சமயோஜிதமாக நடந்து சீனியர் வக்கீல்களிடம் நற்பெயர் காண்பர். சக நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபட துன்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா.
ரோகிணி: குழந்தைப் பேறு கிடைக்கும்

எதிர்காலம் நம் கையில் என்பதற்கேற்ப எதற்கும் கலங்காத மனமும், எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத குணமும் வருங்கால முன்னேற்றம் குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் தீர்க்கதரிசிகளான ரோகிணி நட்சத்திர அன்பர்களே,
குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். இளைய சகோதரர்கள் துணை நின்று உதவிகள் புரிவார்கள். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனமுடன் செயல்பட்டால் பிரச்னை குறையும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். ஒழுக்கம் தரும் நல்ல பழக்கங்களை பின்பற்றுவதுடன், தான தர்மம் செய்து ஆயுள், ஆரோக்கியத்தைப் பேணுவீர்கள். தந்தை வழி சார்ந்த உறவினர்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். புதிதாக திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அனுகூல நிலையில் உள்ளது. தொழில் வாய்ப்புகளில் இருந்த போட்டி பொறாமை குறுக்கீடு செய்யும்.

அரசுத்துறை பணியாளர்கள் யினர், அதிகாரப் பதவி வகிப்பவர்களின் குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு, மனவருத்தத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. கடந்த காலங்களில் பணியில் இருந்த மந்தநிலை அனுபவசாலிகளின் ஆலோசனையால் தவிர்க்கப்படும். காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறையினர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகி பின்னர் நன்மதிப்பை பெறுவார்கள். சிலருக்கு அரசாங்க வகையில் பாராட்டும், விருதும் கிடைக்கும்.

பூமி, நிலம், வீ்ட்டுமனை தொடர்பான தொழிலில் ஈடுபடுவோர் சீரான லாபம் பெறுவார்கள். கார்ப்பரேட் மருத்துவமனை நடத்துபவர்கள் தங்கள் தொழிலில் வெற்றியும், புகழும் பெறுவார்கள். அடுக்கு மாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்பவர்கள் பயனீட்டாளர்களுக்கு நிறைந்த சலுகைகள் வழங்குவதன் மூலம் தொழில் வளர்ச்சி காண்பர். வாகனப் பயணத்தின் போது மிகுந்த கவனமுடன் யெல்படுவது நல்லது. உடல் நலத்தில் சிறிய பாதிப்பு வந்தாலும் உடனுக்குடன் சிகிக்சை எடுத்துக் கொள்வது நல்லது. வாகன பராமரிப்புக்காக அடிக்கடி மராமத்துச் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள். அரசிடம் கேட்டிருந்த கடனுதவி, வரவேண்டிய நிலுவைத்தொகை எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இடைஞ்சல் செய்யும் நோக்குடன் சிலர் செயல்படுவார்கள். அவர்களை இனம் கண்டு விலகுவீர்கள். பணிச்சுமை காரணமான குழப்பமும் துக்கமின்மை உண்டாகி பின்னர் சரியாகும்.
கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நண்பர்களே முயற்சிப்பர். கடின உழைப்பை செயல்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும். வெளியுலக பிரச்னைகள் உங்களைத் துன்பப்படுத்தினாலும் குடும்பத்தினர் தகுந்த முறையில் ஆதரித்து உறுதுணையாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் உங்களுக்கு நிறையவே காத்திருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நல்ல பெயரை தற்காத்துக் கொள்வதற்கு இந்த காலகட்டம் உதவிகரமாக இருக்கும். அரசுக்கு சொந்தமான இடங்களை சட்ட விரோதமாக கையகப்படுத்தி பல காலம் பயன் பெற்றவர்கள் அரசின் முறையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அரசியல்ரீதியாக போட்டியும் பொறாமையும் உண்டாகி வழக்குகளும் பொருளாதார சிரமங்களும் உண்டாகும்.
மாணவமணிகள் சிறப்பான வளர்ச்சி காணலாம். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பரிகாரம்: அம்பாளுக்கு மல்லிகை மலர் அர்ப்பணித்து பூஜை செய்ய வழி பிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 7, 9
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் தும் துர்கையை நமஹ
மிருகசீரிடம்: உற்சாக மனப்பான்மை

உண்மையும் உழைப்பும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே, உங்களின் மனக்கவலைகள் அடியோடு விலகும். நல்லவர்களின் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.
இந்த வருடம் நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்மிக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத் தரும். வீடு மனை புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் வாய்ப்புகள் வந்து சேரும். புத்திரர்களால் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வழக்கு பிரச்னைகளில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்கும் வரக்கூடிய கருத்து வேறுபாடுளை களைவதில் புத்திரர்கள் பாலமாகச் செயல்பட்டு சரிப்படுத்துவார்கள். ஆயுள் அபிவிருத்தி ஏற்படும்.
அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பணியின் பொருட்டு அடிக்கடி வெளியூர், வெளிநாடு என பல்வேறு இடங்களுக்கு சென்று வர நேரிடும். ஒரு பலனும் இல்லையே என்று ஏங்கிய உங்களுக்கு ராசிநாதன் சூரியன் பத்தில் நிறைந்து அனுகூலத்தை தருகிறார். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன் நடக்கும். உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட தயக்கம் காட்டிய ஊழியர்கள் கூட உங்கள் சொல்லை மதித்து நடக்கும் நிலை உருவாகும்.
வியாபாரிகளுக்கு சீரான லாபம் கிடைக்கும். லாப விகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதனத்தை தொழிலில் அதிகரிக்கச் செய்வர். ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள். நகைகளை விற்பனை செய்வோர் தொழில் முன்னேற்றம் காண்பர். பூஜைப் பொருட்களுக்கான கடை வைத்திருப்போர் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டு மகிழ்வர்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளிடம் நற்பெயர் காண்பர். தேவையான சலுகைகள் கிடைக்கப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் அவசிய செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். பெண்கள் தங்கள் உறவினர்களிடம் அன்பையும், அரவணைப்பையும் வெளிப்படுத்துவர். உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு துணை நிற்கும். தேவையான சமயத்தில் தக்க ஓய்வும் பெற்று நிம்மதியுடன் வாழ்க்கை நடத்துவீர்கள்.
கலைத்துறையினர் தங்களின் திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரம் பெற்று மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். வேடிக்கை விநோத மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் மிகுந்த வரவேற்புடன் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். இசைக்கலைஞர்கள் புகழ், பாராட்டு பெறுவார்கள். தொழில் வகை எதிரிகள் கூட உங்களுடன் ஏற்பட்ட பகைக்காக வருத்தம் கொள்வர்.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பிறருக்கான நடத்தி தரவேண்டிய பணிகளையும் செய்து முடிப்பீர்கள். ஆன்மிக எண்ணம் மனதில் ஊற்றெடுப்பதால் தெய்வ காரியங்களை விருப்பத்துடன் செய்வீர்கள். அடுத்தவர் செலவில் நீங்கள் உங்கள் தேவைகள் எதையும் பூர்த்தி செய்ய மாட்டீர்கள். மேலிடம் எல்லா வகையிலும் உங்களுக்கு துணை நிற்பர். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
மாணவர்கள் கல்விக்கேற்ப வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய தெளிவு பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனதில் அமைதி குடியிருக்கும. பிரயாணத்தால் சுகமான அனுபவம் உண்டாகும். கைச்செலவு பணத்தை கவனமுடன் வைத்துக்கொள்ளும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்க துன்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 5, 7, 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் செளம் சரவணபவ; ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement