Load Image
Advertisement

ரிஷபம் : குருப்பெயர்ச்சி பலன் .. போட்டியில் வெற்றி

கார்த்திகை: போட்டியில் வெற்றி

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சூரியனுடைய அம்சத்தில் பிறந்த நீங்கள் தந்தையாரின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பீர்கள்.
இந்த குருபெயர்ச்சியில் தொடக்கத்தில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். மனதில் திடீரென தடுமாற்றம் உண்டாகலாம். நட்சத்திராதிபதி சூரியன் சஞ்சாரத்தால் பணவரவு திருப்தி தரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தால் அனுகூலம் உண்டு. உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பண பரிவர்த்தனை சீராக இருந்து வரும். இடமாற்றம், பணிமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். திறமை, சாதுர்யம், பராக்கிரமம் வெளிப்படும். செயலில் உத்வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சிறப்பாக நிறைவேறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடினமான பணிகள் கூட எளிதாக நடந்து முடியும். பணியிடத்தில் காணப்பட்ட குறைகள் ஒவ்வொன்றாக மறையும். புதியவர்களிடம் உஷாராக இருப்பது நல்லது.
குடும்பத்தினரின் பேச்சு, நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் நலனில் அக்கறை தேவைபெரியோர்களின் ஆலோசனை, வழிகாட்டுதலுடன் புதிய விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். நிலம், வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும்.
அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் பணிகளில் தொய்வும், அதன்மூலம் மனதில் லேசான வருத்தமும் ஏற்படலாம். அதற்காக வருந்த வேண்டாம். அவையெல்லாமே தற்காலிகமாக தோன்றி பின் மறைந்து போகும். மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் நபர்களுக்கு பிரச்னைகள் தலைதுாக்கலாம். கவனம் தேவை. தொண்டர்கள் வகையில் செலவும் அதிகரிக்கும்.
பெண்கள் எடுத்த காரியத்தில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவர். வீண்கவலை, தடுமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம் கவனம். பெரியோர் ஆலோசனையை பின்பற்றுவது நிம்மதிக்கு வழிவகுக்கும். வீண்பொழுது போக்குகளை குறைத்துக் கொள்வது நல்லது. அக்கம்பக்கத்தினரின் தொல்லைகள் தானாக விலகும். கண் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்டு படிப்பது, படிப்பதை எழுதிப் பார்ப்பது வெற்றிக்கு உதவும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். பரிசு, பாராட்டுக்கு குறைவிருக்காது.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.
ரோகிணி: ஆடம்பரச் செலவு கூடும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
சுக்கிரன் - சந்திரன் அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் கவர்ச்சியான பேச்சின் மூலம் காரியங்களை சாதிக்கும் திறமை உடையவர்கள். இந்த குருபெயர்ச்சியில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள்.
தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தம், பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடந்த காலத்தில் இருந்த பொருளாதார சிக்கல் விலகும். விவசாயத்தில் கிடைத்த விளைபொருட்களை விற்பவர்கள் கூடுதல் லாபம் காண்பர். புதிய நிறுவனம், கிளையைத் துவங்க ஏற்ற காலம் இது. பங்குதாரர்களின் ஆலோசனையை பின்பற்றினால் அபிவிருத்தி காணலாம். கடந்த கால உழைப்பு வீண் போகாது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நல்ல தகவல், ஆதாயம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமையால் டென்ஷன் அடைய வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவு ஆறுதல் தரும். ஆடம்பரத்தால் செலவு அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. நிதிநிறுவனம், பணம் தொடர்பான துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. முக்கிய பொறுப்பு, பணிகள், கோப்புகளை பிறரிடம் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. முடிந்த வரை தர்மபணிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். குலதெய்வ அருளால் குடும்பத்தில் அமைதி இருக்கும். பெற்றோர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். முயற்சிக்கேற்ப பலனைக் காண்பார்கள். ஆனாலும் அதிகமான உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ப வருமானம் அதிகமாக இருக்கும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். சிக்கனமாக செலவழிக்கவும். சினிமா. நாட்டியம், நாடகம், ஓவியம் சித்திரம், சிற்பம் முதலிய கலைத்துறையினருக்கு அமோகமான வரவேற்பு கிடைக்கும். பொன்னும் பொருளும் பரிசாக கிடைக்கும். அரசாங்கத்தின் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்க்காமல் பதவி உயர்வு கிடைக்கும். முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணர்வீர்கள். முன்விரோதம் காரணமாக சிலர் சிக்கலுக்கு ஆளாகலாம். அதனை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். புதிய முயற்சிகளை ஈடுபடும் போது நிதானம் தேவை.

பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அது பற்றிய முடிவை ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் எடுப்பது நல்லது. மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு, ஒற்றுமை அதிகரிக்கும். திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. பணியில் ஈடுபடும் பெண்களுக்கு விடாமுயற்சி, கடின உழைப்பு தேவைப்படும்.
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். பாடங்களை திட்டமிட்டு படித்து தேர்வில கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிப்பர். முன்னேற்றம் அடைவதற்கான பாதைகளை நண்பர்களுடன் பேசி மகிழ்வர். முன்னோர்களின் ஆசியும், தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமியை மல்லிகையால் அர்ச்சனை செய்ய காரிய வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி நான்காவது நடசத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட நீங்கள் எடுத்துக் கொண்ட காரியங்களை வேகமாக செய்து முடிக்கும் திறன் உடையவர்கள். ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது அவசியம்.
இந்த குருபெயர்ச்சியால் சுபவிஷயங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். கவலை நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலருக்கு வாழ்க்கைத்தரம் உயரும். நட்சத்திராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சக வியாபாரிகளுடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிப்பர். மேல் அதிகாரிகளின் பாராட்டும் பரிசும் கிடைக்கப் பெறுவார்கள். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு, வாக்குவாதங்கள் ஏற்படலாம். வரவுக்கேற்ற செலவுகளும் அதிகரிக்கும். வருங்காலத்திற்குத் தேவையான சேமிப்பிலும் அக்கறை கொள்வது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உறவினர்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். திட்டமிட்ட செயல்களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். வாகன பயணத்தில் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சி தரும் காலகட்டம் இது. தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட தொண்டர்கள் வகையில் கூடுதல் செலவு ஏற்படலாம்.
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். தோழிகள், உறவினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற கூடுதல் நேரம் படிப்பர். கலை, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் உதவி கிடைக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பணி நிலைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement