Load Image
Advertisement

துலாம் : குருப்பெயர்ச்சி பலன் .. கடன் பிரச்னை குறையும்

சித்திரை: குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினைந்தாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் தைரியமானவர்கள். அதிகார தோரணையுடன் காணப்படும் உங்களுக்கு முதல் இரண்டு பாதத்திற்கு குரு பகவான் மறைவு ஸ்தானத்திற்கு மாறுகிறார். மற்ற இரண்டு பாதத்திற்கு குரு பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். நல்ல பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனிவழி என்று செயல்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தியில் தெளிவு உண்டாகும். நல்லது எது, கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் வாழ்வில் வெற்றி காண்பீர்கள். வழக்கு விவகாரங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

பணவரவு கூடும். செயலில் திறமை அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்று மகிழ்வீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர்.
குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபச்செலவு உண்டாகும்.
தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது பற்றிய எண்ணம் மேலோங்கும். அதற்கான நிதியுதவி தாராளமாகக் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆதரவும், ஆலோசனையும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தமான தொழில்கள் சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வளர்ச்சிப்பாதையில் பயணிப்பீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நவீன உத்திகளை கையாள்வீர்கள். பழைய கடன் அடைபடும்.
பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். பணியிட மாற்றம் சம்பந்தமான கோப்புகள் பரிசீலிக்கப்படும். வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். சிலருக்கு பதவி, ஊதிய உயர்வும் கிடைக்கும்.
சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவர்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த செயல்கள் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ப புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு சீரான முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடினாலும் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள். வெளிநாட்டு பயணங்களால் இனிய அனுபவம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். குருபார்வையால் பணவரவு அதிகரிக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். மக்கள் மத்தியில் மரியாதை கூடும். எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பீர்கள். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்கள் வகையில் பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் ஆதரவும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். படிப்புடன் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிறன்று வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றி பெறும்.

சுவாதி: கடன் பிரச்னை குறையும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சுக்கிரன் - ராகு அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் சோம்பல் அறியாதவர்கள்.
புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் சமாளித்து வெற்றி பெறும் உங்களுக்கு இந்த பெயர்ச்சியில் 12 ஆண்டுக்குப் பிறகு குருபகவான் நேரடி ஏழாம் பார்வையாக பார்க்கிறார். சுபவிஷயத்தில் ஏற்பட்ட தடையனைத்தும் விலகும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வீர்கள். குருபகவான் எல்லா காரியங்களிலும் அனுகூலத்தை தருவார். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு விஷயத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசு ரீதியான விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர் நீங்கள். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெற்று மகிழ்வீர்கள். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். சிக்கலான வழக்குகளில் இருந்தவர்களுக்கு திடீரென அனுகூலமான முடிவால் நன்மை கிடைக்கும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். மனதில் புத்துணர்வும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
நீங்கள் முடிக்க வேண்டும் என நினைத்த காரியம் கச்சிதமாக முடியும். அரசு வகையில் சாதகமான பலன் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் செல்ல நேர்வதால் அலைச்சலுக்கு ஆளாகலாம். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் உடனுக்குடன் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வீடு, வாகனத்தில் மராமத்துச் செலவு கூடும். பிறருக்கு உதவிகள் செய்யும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தீரும். உடன்பிறந்தோர் உங்களால் பயனடைவர். புத்திசாலித்தனத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். துணிந்து செய்யும் காரியங்கள் லாபகரமாக முடிவடையும் காலகட்டம் இது.

தொழில், வியாபார விரிவாக்கத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். வங்கி மூலம் நிதியுதவி கிடைக்க வாய்ப்புண்டு. புதிய யுக்தியால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர் ஆதரவால் விற்பனை ஜோராக நடக்கும். அதற்கேற்ப லாபம் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த மந்தநிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்கள் கூடுதல் கவனமுடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் அன்பாகப் பழகுவீர்கள். இல்லத்தில் திருமணம், வளைகாப்பு போன்ற சுபவிஷயங்களை நடத்தி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமிதம் ஏற்படும்.
கலைத்துறையினர் விடாமுயற்சியுடன் செயல்பட்டு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். கடந்த காலங்களில் இருந்த தடைகள் நீங்கும். சக கலைஞர்கள் உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர். பயணங்களால் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.
அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே தேர்வில் மதிப்பெண் அதிகம் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். சகமாணவர்களிடம் விட்டுக் கொடுப்பது நல்லது.
பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.
விசாகம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதின்மூன்றாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். குருவின் அம்சத்தின் பிறந்த நீங்கள் அடுத்தவருக்காக அதிகம் உழைப்பவர்கள். எப்போதும் அடுத்தவர்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்கும் உங்களுக்கு குரு பகவான் நட்சத்திர நாதனாவார். முதல் மூன்று பாதங்களுக்கு ஏழாமிடத்திற்கும் கடைசி பாதத்திற்கு ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கும் மாறுகிறார். எதிர்பார்த்த செயல்கள் சாதகமாக நடக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
போட்டி, எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நேரம் தவறி உண்ண வேண்டியிருக்கும். வாகனம், வீடு வகையில் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
இஷ்டத்திற்கு விரோதமான சூழல் உருவானாலும் முடிவு சாதகமாக இருக்கும். மனதில் அவ்வப்போது வீணான ஆசைகள் தோன்றும். மனக்கட்டுப்பாட்டுடன் புறக்கணிப்பது நல்லது. அகலக்கால் வைக்காமல் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருங்கள். நெடுநாளாக நடக்கும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உலக விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்காமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டாகும்.
குடும்பம் பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் உடனுக்குடன் தீர்வதற்கான வழி கிடைக்கும். குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பர். மருத்துவச் செலவு குறையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பது நன்மையளிக்கும். பக்தி எண்ணம் மேலோங்கும். ஆன்மிகச் சுற்றுலாவாக செல்ல வாய்ப்புண்டு. கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். திருட்டு போன பொருளும் திரும்பக் கிடைக்கும். சிலருக்கு வீடு அல்லது ஊர் மாற்றம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே சாதகமான பலன் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தொழிலாளர் ஒத்துழைப்புடன் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் உங்கள் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல், உடல்சோர்வு ஏற்படலாம். வீண் கருத்து மோதல்களை தவிர்க்கவும். பணிச்சுமை காரணமாக கூடுதலாக உழைக்க நேரிடும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பீர்கள். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறுவதில் தாமதம் உண்டாகலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும் சிறப்பான காலகட்டம் இது. பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பேசிப் பழக வேண்டாம். கணவரின் ஒத்துழைப்பால் நிம்மதி காண்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள்.
அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மக்கள், தொண்டர்களின் மத்தியில் மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும். எந்த சவாலான விஷயத்தையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.கட்சியினர் மத்தியில் திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிப்பர். வீண்பொழுது போக்குகள், தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு வர பொன்பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement