Load Image
Advertisement

கோவை கோனியம்மனுக்கு கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்

கோவை; கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கோனியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.

கோவை கோனியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த, 12ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 13ம் தேதி, பூச்சாட்டு விழாவும், 20ம் தேதி, கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து நாள்தேறும் யாகசாலை பூஜைகளும், புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில் கோனியம்மன் திருவீதியுலா வந்து, பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நேற்று, இரவு, 8:06 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோனியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் வெகுவிமர்சையாக நடந்தது. தொடர்ந்து, இரவு, 11:00 மணிக்கு, பூத வாகனத்தில், அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று பகல், 2:05 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement