Load Image
Advertisement

புற்று மாகாளியம்மன், அர்ஷவதன நாராயண பெருமாள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி; அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் புற்று மாகாளியம்மன் மற்றும் அர்ஷவதன நாராயண பெருமாள், கருப்பராய ஸ்வாமி கோவிலில் பொங்கல் சாட்டு விழா நடைபெற்றது.

அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், காசி கவுண்டன் புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள புற்று மாகாளியம்மன், அர்ஷ வதன நாராயண பெருமாள் மற்றும் கருப்பராய சுவாமி கோவிலில் பொங்கல் சாட்டு விழா கடந்த 25ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. அதன் பின்னர், 26ம் தேதி பொரி மாற்றுதல், காப்பு கட்டுகள் நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று கரகம் எடுத்து வருதல், படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மாவிளக்கு எடுத்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் மற்றும் கருப்பராய சுவாமிக்கு கிடாய் வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை அலங்கார பூஜை, மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் சாட்டு விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement