Load Image
Advertisement

செவ்வாய் வாஸ்து நாள்; முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும்!

செவ்வாய்க்கு அதிபதியான முருகனை இன்று தரிசிப்பது சிறப்பு. சிவனின் மறுவடிவே முருகன். அம்பிகையின் அம்சமே முருகனின் கரத்தில் இருக்கும் வேல். முருகனை வழிபடுவோரை தீ வினை தீண்டாது. செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும், கடன்கள் தீரும். முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும். முருகன் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். இன்று கந்தனை வணங்கி கவலையின்றி வாழ்வோம். வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து முக்கிய இடம் பெறுகிறது. வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பானது. வீட்டில் விளக்கேற்றி வழிபட ஐஸ்வரியம் பெருகும் வாஸ்து பிரச்சனை நீங்கும். ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ என்ற மந்திரத்தை கூறி வழிபட இல்லம் சுபிட்சமாகும். சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. இன்று குருவை வழிபட்டால் வாழ்வில் சுபயோகம் தேடி வரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement