Load Image
Advertisement

ஐங்குறுநூறு (பகுதி-9)

ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவண னாக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி
நீல்நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே. 401 புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்

நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே. 402 புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றே
அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலில் இன்னகை பயிற்றிச்
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே. 403 வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத்
தானவன் சிறுபுறம் கவையினன் நன்று
நறும்பூம் தண்புற அணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. 404 ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல்
பூப்பல அணிந்த வைப்பின்
புறவணி நாடன் புதல்வன் தாயே. 405 மாதர் உண்கண் மகன்விளை யாடக்
காதலித் தழீஇ இனிதிருந் தனனே
தாதார் பிரசம் ஊதும்
போதார் புறவின் நாடுகிழ வோனே. 406 நய்ந்த காதலித் தழீஇப் பாணர்
நய்ம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென்புல வைப்பின் நாடுகிழ வோனே. 407 பாணர் முல்லை பாடச் சுடரிழை
வணுதல் அரிவை முல்லை மலைய
இனிதிருந் தனனே நெடுந்தகை
துனிதீர கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. 408 புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
இனிது மன்றஅவர் கிடக்கை
நனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே. 409 மாலை முன்றில குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி யாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித் தம்ம பாணனது யாழே. 410 ஐங்குறுநூறு - 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து 2950;ர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார்தொடங் கின்றால் காமர் புறவே
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே. 411 காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே. 412 நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்
நின்னே போல மஞ்ஞை யாலக்
கார்தொடங் கின்றால் பொழுதே
பேரியல் அரிவை நாநயத்தகவே. 413 புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்
கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி
மெல்லியல் அரிவை கண்டிகு
மல்லல் ஆகிய மணங் கமழ் புறவே. 414 இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே
உதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே
இனிதுடன் கழிக்கின் இளமை
இனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே. 415 போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து
களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின்
மடப்பிடி தழீஇய மாவே
சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே. 416 கார்கலந் தன்றால் புறவே பலவுடன்
நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து
தாதார் பிரசம் மொய்ப்பப்
போதார் கூந்தல் முயங்கினள் எம்மே. 417 வானம் பாடி வறங்களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவின் காண்வர
வானர மகளா நீயே
மாண்முலை அடைய முயங்கி யோயே. 418 உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா விருந்து கவவி
நம்போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகு மடவரல் புறவின் மாவே. 419 பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்
தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே நின்னைக்
காணிய வருதும் யாமே
வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே. 420 ஐங்குறுநூறு - 43. விரவுப் பத்து மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்
புன்புல நாடன் மடமகள்
நலங்கினர் பணைத்தோள் விலங்கின செலவே. 421 கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி
நெடுங்கொடி முல்லையொடு தளவமதிர் உதிர
விரையுபு கடை இநாம் செல்லின்
நிரைவளை முன்கை வருந்தலோ இலளே. 422 மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே
வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே
யாமே நிந்துறந்து அமையலம்
ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே. 423 புறவணி நாடன் காதல் மடமகள்
ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப்
போதவிழ் தாமரை அன்னநின்
காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே 424 புன்புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடுந்தேர் கடவின்
அல்லல் அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே. 425 வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி
நன்னுதல் யானே செலஒழிந் தனனே
முரசுபாடு அதிர ஏவி
அரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே. 426 பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே
காரெதிர் ஒழுதென விடல்ஒல் லாயே
போருடை வேந்தன் பாசறை
வாரான் அவனெனச் செலவழுங் கினனே. 427 தேர்செல அழுங்கத் திருவில் கோலி
ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே
வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய
யாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே. 428 பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல்கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வெந்துபகை வெலற்கே. 429 நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை
அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும்
கான்கெழு நாடன் மகளோ
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே. 430 ஐங்குறுநூறு - 44. புறவணிப் பத்து நன்றே காதலர் சென்ற ஆறே
அணிநிற இரும்பொறை மீமிசை
மணிநிற உருவின தோகையும் உடைத்தே. 431 நன்றே காதலர் சென்ற ஆறே
சுடுபொன் அன்ன கொன்றை சூடிக்
கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே 432 நன்றே காதலர் சென்ற ஆறே
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே. 433 நன்றே காதலர் சென்ற ஆறே
மறியுடை மாண்பிணை உகளத்
தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே. 434 நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன் அணி நெய்தல் மலரப்
பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே.435 நன்றே காதலர் சென்ற ஆறே
நன்பொன் அன்ன சுடரிணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே. 436 நன்றே காதலர் சென்ற ஆறே
ஆலித் தண்மழை தலைஇய
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 437 நன்றே காதலர் சென்ற ஆறே
பைம்புதல் பம்பூ மலர
இன்புறத் தருந பண்புமார் உடைத்தே. 438 நன்றே காதலர் சென்ற ஆறே
குருந்தக் கண்ணிக் கோவலர்
பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே. 439 நன்றே காதலர் சென்ற ஆறே
தன்பெயல் அளித்த பொழுதின்
ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. 440 ஐங்குறுநூறு - 45. பாசறைப் பத்து ஐய ஆயின செய்யோள் களவி
கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென
நோய் நன்கு செய்தன் எமக்கே
யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே. 441 பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ
இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து
அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணிப்பூண் புதல்வன் கற்பின்442 நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று
இலங்கு நிலவின் இளம்பிறை போலக்
காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுயர் அரண்பல வெளவிய
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே. 443 பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து
வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை
வென்வேல் வேந்தன் பகைதணிந்து
இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே. 444 புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்
துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர்
நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
உள்லூதொறும் கலிழும் நெஞ்சம்
வல்லே எம்மையும் வரவிழைந் தனையே. 445 முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை அருந்தொழில் உதவிநம்
காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே. 446 பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே
பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
யாடு சிறைவண்டு அழிப்பப்
பாடல் சான்ற காண்கம்வாள் நுதலே. 447 தழங்குரல் முரசம் காலை இயம்பக்
கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந் தனனே.
மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்குபெயல் கனைதுளி கார் எதிர்ந் தன்றே
அஞ்சில் ஓதியை உள்லுதொறும்
துஞ்சாது அலமரல் நாமெதிர்ந் தனமே. 448 முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு
பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
ஒள்நுதல் காண்குவம் வேந்துவினை முடினே. 449 முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து
நாடுமுன் னியரோ பீடுகெழ வேந்தன்
வெய்ய உயிர்க்கு நோய்தணியச்
செய்யோள் இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே. 450

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement