Load Image
Advertisement

பதியின் இயல்பு

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்
சிந்தி தம்தே சோமயம்
சின்மய நிரஞ்சன நிராலம்ப நிர்க்குணம்
திகழ்அவ் வியயம் சர்வகம்
மவுனமன பாவனா தீதம்அனகஞ் சுத்தம்
வளர்அ நூபம் நிர்மலம்
மன்னும்அப் பிரமேயம் நித்தியம் அனாமயம்
மகாபரம சுகம னாதி
பவரகித மறைபயில் அநாதார நாதாந்த
பரம சஞ்சல நிட்களம்
பன்னகும் அகண்டித பரம்பிரம நீயாம்
பரசுக மகோத தியதின்
திவலைதனில் ஆயிரத் தொருகூற தாகும்உயர்
தெய்வவடி வங்கள் அன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement