Load Image
Advertisement

வயிரவர் துதி!

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கை
தரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்து
உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் - விளா
சிரித்து அருள் செய்தார் சேரை செந்நெறிச் செல்வனாரே!

கலையாறும் முத்தமிழ் கல்வியும் யோகமும் காசினியில்
நிலையாகிய பெரும் செல்வமும் நீதியும் நீ அருள்வாய்

மாலை ஆசன வருகேச கங்காள பைரவனே!
தலைமாலை சூழ்புயனே காழி ஆபதுத் தாரணணே!

வயிரவர்

பட்டியிலே எழுந்தருளிக் கோயில் கொண்டு
பழமறைகள் நாதமெல்லாம் கேட்டுக் கொண்டு
கட்டிமையோர் சூழ்ந்திருக்க மனிதர்க் காகக்
காவலுக்கோர் தெய்வமான நிலத்திலுற்று
மட்டில்லாச் சூலமுடன் தமடு கத்தை
மணிக் கரங்கள் கொண்டிலங்க ஞமலி ஏறிப்
பட்டி தொட்டி அத்தனையும் காக்கும் எங்கள்
பழந்தெய்வம் வயிரவரே! சரணம் காப்பு!
காலத்தை வென்றவனே! காசிக்குச்
சென்றவனே! கயிலை வாழும்
மூலத்தைக் காட்டியவா! சூலத்தை
நீட்டியவா! ஞமலி முற்றும்
கோலத்தைக் காட்டியவா! கொடுமையினை
வாட்டியவா! கோபம் கொண்டு
வேழத்தை உரித்தவனே! வயிரவா!
பணிகின்றோம் வினைகள் தீர்ப்பாய்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement