Load Image
Advertisement

செங்கமல நாயகி அம்மன் 108 போற்றி!

1. ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
2. ஓம் அருமறைப் பொருளே போற்றி
3. ஓம் அஞ்சாத நாயகியே போற்றி
4. ஓம் அஞ்சினை வென்றவளே போற்றி
5. ஓம் அபிக்ஷேகப் பிரியையே போற்றி
6. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
7. ஓம் அர்ச்சனைப் பிரியையே போற்றி
8. ஓம் அனைவரையும் காப்பவளே போற்றி
9. ஓம் அறம் வளர்ப்பவளே போற்றி
10. ஓம் அபிராம வல்லியே போற்றி
11. ஓம் ஆதியின் பாதியே போற்றி
12. ஓம் ஆருயிர் மருந்தே போற்றி
13. ஓம் ஆயுதம் ஏந்தியவளே போற்றி
14. ஓம் ஆதி நாயகியே போற்றி
15. ஓம் இளமை நாயகியே போற்றி
16. ஓம் இல்லத்தைக் காப்பாய் போற்றி
17. ஓம் ஈசனின் பாதியே போற்றி
18. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி
19. ஓம் உலகளந்த நாயகியே போற்றி
20. ஓம் உலகேழும் பெற்றவளே போற்றி
21. ஓம் என்னை வளர்ப்பவளே போற்றி
22. ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
23. ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி
24. ஓம் எம் பெருமாட்டி இணையடி போற்றி
25. ஓம் ஏழுலகமும் ஈன்றாய் போற்றி
26. ஓம் ஏழிசை நாயகியே போற்றி
27. ஓம் ஏழையர்க்கு அன்னையே போற்றி
28. ஓம் ஏங்குவோர்க்குத் துணையே போற்றி
29. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
30. ஓம் ஐயனாரின் தாயே போற்றி
31. ஓம் ஒளிக்குள் ஒளியே போற்றி
32. ஓம் ஓம் சக்தியே போற்றி
33. ஓம் ஓங்கார உருவே போற்றி
34. ஓம் ஔவியம் ஆனவளே போற்றி
35. ஒம் ஔவைக்கு அருளியவளே போற்றி
36. ஓம் நாட்டாரின் தெய்வமே போற்றி
37. ஓம் நகரத்தாரைக் காப்பவளே போற்றி
38. ஓம் சப்பரத்தில் வருபவளே போற்றி
39. ஓம் சந்ததியைத் தருபவளே போற்றி
40. ஓம் அன்னத்தில் வருபவளே போற்றி
41. ஓம் அகிலத்தை காப்பவளே போற்றி
42. ஓம் சிம்ம வாகினியே போற்றி
43. ஓம் சீக்கிரம் வந்திடுவாய் போற்றி
44. ஓம் பூத்தேரில் வருபவளே போற்றி
45. ஓம் புவனங்களைக் காப்பவளே போற்றி
46. ஓம் காமதேனுவில் வருபவளே போற்றி
47. ஓம் கவலைகளைத் தீர்ப்பவளே போற்றி
48. ஓம் குதிரையில் வருபவளே போற்றி
49. ஓம் குறைகளைத் தீர்ப்பவளே போற்றி
50. ஓம் திருநிலை நாயகியே போற்றி
51. ஓம் தேரில் வருபவளே போற்றி
52. ஓம் மதுக்குடப் பிரியையே போற்றி
53. ஓம் மதுரைக்கு அரசியே போற்றி
54. ஓம் குட்டி நிமித்தம் கேட்பவளே போற்றி
55. ஓம் குற்றம்பொறுக்கும் குணத்தாளே போற்றி
56. ஓம் குலவைப் பிரியையே போற்றி
57. ஓம் கூப்பிட்டால் வருபவளே போற்றி
58. ஓம் பூப்பல்லக்கில் வருபவளே போற்றி
59. ஓம் பூமாலை சூடுபவளே போற்றி
60. ஓம் கண்ணில் தெரிந்தாய் போற்றி
61. ஓம் விண்ணில் நிறைந்தாய் போற்றி
62. ஓம் கண்மணி ஆனாய் போற்றி
63. ஓம் கருத்தொளி தருவாய் போற்றி
64. ஓம் கல்விக்கு வித்தே போற்றி
65. ஓம் கருணையின் ஊற்றே போற்றி
66. ஓம் கரும்பை ஏந்தியவளே போற்றி
67. ஓம் காவல் தெய்வமே போற்றி
68. ஓம் காளியம்மனே போற்றி
69. ஓம் சக்தியின் வடிவே போற்றி
70. ஓம் சத்தியப் பொருளே போற்றி
71. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
72. ஓம் சீரபிராமித் தேவியே போற்றி
73. ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
74. ஓம் செட்டி மக்களைக் காப்பாய் போற்றி
75. ஓம் செந்தாமரை ஏந்தியவளே போற்றி
76. ஓம் செங்கணிச் செங்கலமே போற்றி
77. ஓம் செய்த பாவம் தீர்ப்பவளே போற்றி
78. ஓம் செம்பட்டுடையாளே போற்றி
79. ஓம் செல்வம் தருவாய் போற்றி
80. ஓம் செல்வத்தின் செல்வியே போற்றி
81. ஓம் பிணிகளைத் தவிர்த்திடுவாய் போற்றி
82. ஓம் பிறவித் துயர் துடைப்பாய் போற்றி
83. ஓம் தர்மத்தின் தலைவியே போற்றி
84. ஓம் தையல் நாயகியே போற்றி
85. ஓம் தன்னம்பிக்கை தருபவளே போற்றி
86. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
87. ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
88. ஓம் தோத்திரப் பிரியையே போற்றி
89. ஓம் நிறைவைத் தருவாய் போற்றி
90. ஓம் நித்தமும் காப்பாய் போற்றி
91. ஓம் நீலி சூலி காளி போற்றி
92. ஓம் உருவில் உயிரே போற்றி
93. ஓம் விரைவில் வருவாய் போற்றி
94. ஓம் ஆற்றல் வடிவே போற்றி
95. ஓம் போற்றி உடையாய் போற்றி
96. ஓம் மாயவன் தங்கையே போற்றி
97. ஓம் சேயவன் தாயே போற்றி
98. ஓம் எவ்வடிவிலும் இருப்பவளே போற்றி
99. ஓம் மாசறு பொன்னே போற்றி
100. ஓம் வலம்புரி முத்தே போற்றி
101. ஓம் ஆசிதரும்அன்னையே போற்றி
102. ஓம் இளவஞ்சிக் கொம்பே போற்றி
103. ஓம் கோமள வல்லியே போற்றி
104. ஓம் குவளைக் கண்ணியே போற்றி
105. ஓம் நலமனைத்தும் தருபவளே போற்றி
106. ஓம் மங்கல நாயகியே போற்றி
107. ஓம் பலவான்குடித்தாயே போற்றி போற்றி
108. ஓம் எல்லோரையும் காத்திடுவாய் போற்றி போற்றி
- வே. இராமசாமி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement