Load Image
Advertisement

அபிராமியின் 108 போற்றி!

1. ஓம் அபிராமியே போற்றி
2. ஓம் அன்பின் வடிவே போற்றி
3. ஓம் அழகிய மயிலே போற்றி
4. ஓம் அகிமாலினியே போற்றி
5. ஓம் அண்டமெல்லாம் பூத்தவளே போற்றி
6. ஓம் அமுதகடேசரின் துணைவியே போற்றி
7. ஓம் அங்குசம் தருபவளே போற்றி
8. ஓம் அஷ்டசித்தி தருபவளே போற்றி
9. ஓம் அம்புயா தனத்து அம்பிகையே போற்றி
10. ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி
11. ஓம் அமாவாசையை பவுர்ணமி ஆக்கியவளே போற்றி
12. ஓம் ஆத்தாளே போற்றி
13. ஓம் ஆனந்தவல்லியே போற்றி
14. ஓம் ஆனந்த வடிவே போற்றி
15. ஓம் ஆயுதம் ஏந்தா அன்னையே போற்றி
16. ஓம் ஆதிகடவூரின் வாழ்வே போற்றி
17. ஓம் ஆடும்கூத்தனின் சிவகாமியே போற்றி
18. ஓம் இமவான் மகளே போற்றி
19. ஓம் இடப்பாகம் அமர்ந்தவளே போற்றி
20. ஓம் ஈசனின் துணைவியே போற்றி
21. ஓம் உலகளந்த நாயகியே போற்றி
22. ஓம் உலகேழும் பெற்றவளே போற்றி
23. ஓம் உமையவளே போற்றி
24. ஓம் உருவும் அருவும் இல்லா ஒளியே போற்றி
25. ஓம் ஊழ்வினை அழிப்பவளே போற்றி
26. ஓம் என்னை வளர்ப்பவளே போற்றி
27. ஓம் என்றும் இனிய அபிராமியே போற்றி
28. ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
29. ஓம் ஏதமிலாளே போற்றி
30. ஓம் ஏழைக்கு அருள்பவளே போற்றி
31. ஓம் ஐஸ்வரியம் தருபவளே போற்றி
32. ஓம் ஐந்தொழில் புரிபவளே போற்றி
33. ஓம் ஒளிக்கு ஒளியே போற்றி
34. ஓம் ஒன்பது கோணங்களில் உறைபவளே போற்றி
35. ஓம் ஓம்கார நாயகியே போற்றி
36. ஓம் ஔசதமே போற்றி
37. ஓம் கடவூரின் கண்மணியே போற்றி
38. ஓம் கள்ளவாரணரின் அன்னையே போற்றி
39. ஓம் கரும்புவில் ஏந்தியவளே போற்றி
40. ஓம் கடம்பவனத்தில் இருப்பவளே போற்றி
41. ஓம் கடம்ப மாலை அணிந்தவளே போற்றி
42. ஓம் காதணி வீசிக் காத்தவளே போற்றி
43. ஓம் காலனிடம் இருந்து காப்பவளே போற்றி
44. ஓம் கிளிமொழி பேசுபவளே போற்றி
45. ஓம் கீழத்திசை பார்த்த நாயகியே போற்றி
46. ஓம் குழந்தைக்கு அமுது தந்தவளே போற்றி
47. ஓம் குவளைக் கண்ணியே போற்றி
48. ஓம் குண்டலினி வடிவாக இருப்பவளே போற்றி
49. ஓம் கைகொடுத்துக் காப்பவளே போற்றி
50. ஓம் கொன்றை மலர் கொடியே போற்றி
51. ஓம் கோடி <புண்ணியம் கொடுப்பவளே போற்றி
52. ஓம் சங்கரியே போற்றி
53. ஓம் சகலகலாவல்லியே போற்றி
54. ஓம் சர்வகாலமும் காப்பவளே போற்றி
55. ஓம் சகஸ்ரநாம வடிவே போற்றி
56. ஓம் சந்திர சூரியரை தோடாக அணிந்தவளே போற்றி
57. ஓம் சாந்தி தரும் சன்னதியே போற்றி
58. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
59. ஓம் சிந்துர வண்ணப் பெண்ணே போற்றி
60. ஓம் சிவனின் மறுபாதியே போற்றி
61. ஓம் சுந்தர வல்லியே போற்றி
62. ஓம் சுப்பிரமணியரை அந்தாதி பாடவைத்தாய் போற்றி
63. ஓம் செங்கலத்தாயே போற்றி
64. ஓம் செந்தாமரை ஏந்துபவளே போற்றி
65. ஓம் செய்தபாவம் தீர்ப்பவளே போற்றி
66. ஓம் செம்பட்டுடையாளே போற்றி
67. ஓம் ஞாலம் எல்லாம் பெற்ற நாயகியே போற்றி
68. ஓம் தாமரைத் திருவடியே போற்றி
69. ஓம் தாடங்கத்தை நிலவாகக் காட்டியவளே போற்றி
70. ஓம் திருக்கடவூரின் தலைவியே போற்றி
71. ஓம் தீப ஒளியே போற்றி
72. ஓம் தேவர் தொழும் தாயே போற்றி
73. ஓம் நல வடிவே போற்றி
74. ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
75. ஓம் நலம் அனைத்தும் தருபவளே போற்றி
76. ஓம் நஞ்சுண்டவனின் துணைவியே போற்றி
77. ஓம் நான்மறை வேதமே போற்றி
78. ஓம் நிலவைத் தந்தவளே போற்றி
79. ஓம் நெஞ்சில் நிறைந்தவளே போற்றி
80. ஓம் பராசக்தியே போற்றி
81. ஓம் பதினாறு பேறும் தருபவளே போற்றி
82. ஓம் பட்டருக்கு அருள்தந்தாய் போற்றி
83. ஓம் பாடல் பல தந்தவளே போற்றி
84. ஓம் பிங்கலையே போற்றி
85. ஓம் புரந்தரியே போற்றி
86. ஓம் புவனேஸ்வரியே போற்றி
87. ஓம் பூரணாசலமங்கலையே போற்றி
88. ஓம் பொற்கொடியே போற்றி
89. ஓம் போற்றி பல பாடவைத்தாய் போற்றி
90. ஓம் மனோன்மணியே போற்றி
91. ஓம் மங்கலங்கள் தருபவளே போற்றி
92. ஓம் மலர்க்கணைகள் கொண்டவளே போற்றி
93. ஓம் மாதுளம்பூ நிறந்தாளே போற்றி
94. ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
95. ஓம் முத்துமாலை அணிந்தவளே போற்றி
96. ஓம் முப்பத்திரண்டு அறங்கள் செய்தவளே போற்றி
97. ஓம் முக்கண்ணியே போற்றி
98. ஓம் யாமளவல்லியே போற்றி
99. ஓம் யாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பவளே போற்றி
100. ஓம் ராஜேஸ்வரியே போற்றி
101. ஓம் விழுப்பொருளே போற்றி
102. ஓம் வெற்றிதரும் தாயே போற்றி
103. ஓம் வேலனுக்கு வேல் கொடுத்தாய் போற்றி
104. ஓம் வேதத்தின் தத்துவமே போற்றி
105. ஓம் லோக ரட்சகியே போற்றி
106. ஓம் ஸ்ரீமாதாவே போற்றி
107. ஓம் ஸ்ரீ சக்கரத்தில் இருப்பவளே போற்றி
108. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement