Load Image
Advertisement

குருவாயூரப்பன் நமஸ்காரம்!

(தெச்சி மந்தாரத்துளசி என்ற மலையாள பாடலின் பாட்டு)
கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்.

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
எண்ணை ஸ்னானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும்
கண்ணன் உன்பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில்முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
குடம் குடமாகப் பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு
குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்.

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
திவ்யநாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
(செசூனை கவி சீதாராமையர் இயற்றியது)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement