Load Image
Advertisement

பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் ராமானுஜரின் ஓலைச்சுவடி!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேல்கோட்டையில் ஸ்ரீமத் ராமானுஜர், சுமார் இருபது ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியுள்ளார். தொண்டனூரில் பல கோயில்களைச் செப்பனிட்டார். மேல்கோட்டையில் லட்சுமி நாராயணனுக்கு கோயில் கட்டி, ஆகமப் படி ஆராதனை செய்வதற்கு வழி வகுத்தார். செல்வப்பிள்ளை என்ற உற்சவ மூர்த்தியை டில்லிப் பேரரசனிடமிருந்து மீட்டு வந்தார். கர்நாடகப் பகுதியில் பஞ்சநாராயணர்களுக்குத் திருக்கோயில்கள் எழுப்பினார். விஷ்ணு பக்தியைப் பரப்ப உறுதுணையாக இருக்கும் பொருட்டு, விட்டல÷ தவராயன் என்ற ஜைன மன்னனை விஷ்ணுவர்த்தனன் என்று பெயரிட்டு, வைணவ பக்தனாக மாற்றினார். பல வைணவ மடங்களை நிறுவி, தொடர்ந்து நாராயணசேவை செய்ய ஐம்பத்திரண்டு பேரை நியமித்தார். ராஜமுடி உற்சவம், வைரமுடி உற்சவம் ஆகியவை நடைபெற வழிவகுத்தார்.

ஆயிரக்கணக்கான ஜைனர்கள், வைணவ மதத்தைப்பற்றி ஓராயிரம் கேள்விகள் எழுப்ப, தமது வாதத்திறமையால் அவர்களைத் தோல்வியுறச் செய் தார். அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தார் என் அழைத்திடவும், அவர்கள் மற்ற எல்லோரையும் போல கோயில் உற்சவங்களில் பங்கு கொள்ளவும் சம உரிமைகள் வழங்கினார். திருநாராயணப் பெருமாளின் ஆராதனைகள் தொடர்ந்து செவ்வனே நடந்தேறும் பொருட்டு நியமனப்படி என்ற ஆக்ஞா பத்திரத்தை எழுதி வைத்தார். வைணவத் திருக்கோயில் வழிபாடு மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படுத்தினார். தாம் உருவாக்கிய சீர்த்திருத்தங்களையெல்லாம் ஓர் ஓலைச்சுவடியில் செவ்வனே பதித்தும் வைத்தார். மாருதியாண்டான் என்பவரை அதை ஏழு பிரதிகள் எழுதச் சொல்லி எம்பெருமானார் கட்டளையிட்டார். தம்மால் நியமிக்கப்பட்ட வைணவதாசர்களான திருவனந்தபுரதாசர், யதிராஜதாசர், மாலாகார தாசர், திருக்குறுங்குடி தாசர், வஞ்சிபுரம் தாசர், ஸ்ரீரங்கப்பட்டர், மன்னன் விஷ்ணுவர்த்தனன் ஆகிய ஏழு பேருக்கும் ராமானுஜன் என்று தம் கையொப் பமிட்டு ஒவ்வொரு பிரதியைக் கொடுத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையும் புனிதமுமிக்க அந்த ஓலைச்சுவடியை மேல் கோட்டை தலத்தில் மாபெரும் பொக்கிஷமாக இன்றளவும் பாதுகாத்து வருகிறார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement