Load Image
Advertisement

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரி தாய் சிலை பிரதிஷ்டை

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு துலாக்கட்டத்தில் காவிரி தாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆறுஅடி உ யரமுள்ள காவிரி தாய் சிலை, ஒன்னரைஅடி உயரமுள்ள பீடத்தில் கிழக்கு பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது.

சிலையை மயிலாடுதுறையை சேர்ந்த பவுல்ராஜ் தனது சொந்த செலவில் அமைத்துள்ளார். மகாபலிபுரத்தை சேர்ந்த சிற்பி கண்ணன் என்பவர் காவிரி தாய் சிலையை ஒருகையில் தாமரை மலர், ஒருகையில் நெற்கதிர், இரண்டு கைகளில் குடம் என நான்கு கரங்களுடன், சாமுத்திரிகா லட்சணப்படி வடிவமைத்துள்ளார். சிலை நேற்று காவிரி நிரந்தர நீர்த்தேக்கம் அருகில் உள்ள அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக யாகம் நடத்தப்பட்டு முடிவில் பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க வேத சிவஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் யா கத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு காவிரி தாய்க்கு அபிஷேகம் செய்தார். பின்னர் திரளான பக்தர்கள் காவிரி தாய்க்கு ஆரத்தி வழிபாடு நடத்தினர். காவிரி தாய்

சிலையை நாளை காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் ஆதீன குருமுதல்வர்கள் திறந்துவைப்பார்கள் என புஷ்கரம் கமிட்டியினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் காவிரி புஷ்கரம் கமிட்டி ஒருங்கினைப்பாளர் மகாலெட்சுமி, நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, ஜெகவீரபாண்டியன், அப்பர்சுந்தரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement