Load Image
Advertisement

மயிலாடுதுறை காவிரி மஹா புஷ்கரம் விழா: துலாக்கட்டத்திற்கு செல்லும் மேப் வெளியிடு

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் காவிரி மஹா புஷ்கரம் விழா வரும் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. பக்தர்கள் புனித நீராடுவதற்காக காவிரி துலாக்கட்டம் பகுதியில் பல்வேறு நிதிஉதவியுடன் ரூ 2 கோடி மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் காவிரிக்கரையை அழகுபடுத்தும் பணிகளுடன், அடிப்படி வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவிரி மஹா புஷ்கரம் விழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக மூன்று தற்காலிகபேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி மஹா புஷ்கரம் தொடக்க விழா அன்று காவிரி துலாக்கட்டத்தில் பக்தர்கள் சென்று நீராடி செல்வதற்கான வழி தடங்கள் அடங்கிய மேப் மற்றும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்தை ஒழுங்குபடு த்தும் வகையில் மயிலாடுதுறை நகரத்திற்கு வாகனங்கள் வந்து செல்வதற்கான வழிதடங்கள், தற்காலிகபேருந்து நிலையம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கான மேப் பினை வெளியிட்டுள்ளது. மேப்பை வெளியிட்ட கலெக்டர் சதீஷ்குமார் மஹா புஷ்கர விழாவிற்கு வரும் பக்தர்கள் குளத்திற்கு சென்று புனித நீராடி போக்குவரத்திற்கு இடையுறின்றி செல்ல வேண்டும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வழிதடங்களை முறையாக பயன்படுத்தி விழாவினை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மேலும் இவ்வ ழித்தட வரைபடங்கள் அடங்கிய விளம்பர பலகைகள் ஆங்காங்கே வைக்கப்படும் அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement