Load Image
Advertisement

ஆத்மாவை பார்க்க முடியுமா!

ஆத்மசாந்திக்காக நாம் இறைவனை வேண்டாத நாள் உண்டா? ஆத்மசாந்தி என்றால் உடலுக்கோ, அதனுள் புதைந்துஇருக்கும் கண்ணுக்குத் தெரியாத மனதுக்கோ கிடைக்கும் அமைதியல்ல. ஆத்மா என்பதற்கு உபநிஷதம் விளக்கம் தருகிறது. ஒரு தலை முடியின் நுனியை நூறு பாகமாக வை. அந்த நூறில் ஒன்றை மீண்டும் நூறு பாகமாக்கு. அதிலும் ஒன்றை இன்னும் நூறு பாகமாக்கு. அது தான் ஆத்மா. அவ்வளவு நுண்ணிய ஆத்மா நம் கண்ணுக்குத் தெரியுமா என்றால் தெரியாது. ஆனால், திருப்பாவை படித்தால், அதே ஆத்மா பூதக்கண்ணாடி இல்லாமலே, மிகப்பெரிதாகத் தெரியும். எப்படி? கடைசி பத்து பாடல்களில் ஆத்மாவை இறைவனிடம் சமர்ப்பணம் செய்வது குறித்து ஆண்டாள் பாடுகிறாள். நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே செல்ல வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்கிறாள். நம்மை யார் என்று உணர்த்துகிறாள். பொருள் அறிந்து படித்துப் பாருங்கள், ஆத்மாவைக் காண்பீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement