Load Image
Advertisement

இளமையிலேயே பக்தியைப் பிடியுங்க!

வயதான பிறகு கோயில், குளத்துக்கு போனால் போதும். இளமையில் நமக்கெதற்கு பக்தி என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. ஆனால், ஆண்டாள் இளமையிலேயே பக்தி மேற்கொண்டாள். தன் தோழிகளையும் பக்தி மார்க்கத்திற்கு அழைத்தாள். கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்என்கிறார் நம்மாழ்வார். இளமைப் பருவத்தை வீணான வழிகளில் செலவிடக்கூடாது. இறைவனை பாடல்களால் வழிபடுவது, பூக்கள் தூவி அர்ச்சிப்பது, ஆத்மார்த்தமாக நம்மையே இறைவனிடம் ஒப்படைப்பது, எது நடந்தாலும் இறைவன் செயல் என்று எண்ணுவது ஆகியவை இளமையிலேயே நடந்தேற வேண்டும். முதுமையை சமஸ்கிருதத்தில் பாஷாண ஸந்நிபம் என்பர், அதாவது அசைவற்ற நிலை. முதுமையில் எல்லாம் ஓய்ந்து போகும். பகவானைப் பற்றிப் படிக்க பார்வை இருக்காது. புத்தகத்தை பிடித்தால் கைகள் நடுங்கும். பிள்ளைகளும், உறவினர்களும் சொத்தை எங்கே வைத்திருக்கிறாய்? எனக்கேட்டு பிடுங்குவார்கள். இந்த நேரத்தில் பகவானை வணங்க ஏது நேரம்? எனவே, இளமையிலேயே பக்தியைப் பின்பற்ற திருப்பாவை பாடல்கள் மூலம் கற்றுத் தந்திருக்கிறாள் ஆண்டாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement