Load Image
Advertisement

ஐயப்பன் வரலாறு

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

கேரளம், பரசுராமரால் ஸமுத்ர ராஜனிடமிருந்து கேட்டு வாங்கி உண்டானது என்றும் அதில் அனேக சிவன்கோயில்கள், அம்பாள் (பகவதி) கோயில்கள், ஐயப்பன் கோயில்களும் ஏற்படுத்தி பூஜாக்கிரமங்களும் ஏற்படுத்தி, செய்வித்து இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இது ராமாவதாரத்தில் நடந்தது. அதில் சபரிகிரியில் ப்ரதிஷ்டை செய்த ஐயப்ப க்ஷேத்திரம் ப்ரதானமானது.

பாலாழியைகடைந்து அம்ருதம் பகர்வதற்காக மஹாவிஷ்ணு மோஹிணி அவதாரம் செய்ததும் இந்த அவதாரத்தில் பரமேச்வரன் மோஹம் கொண்டு சைவ வைஷ்ணவ ஜ்யோதியாய் ஐயப்பன் திரு அவதாரம் செய்ததும் விஷ்ணு புராண வரலாறுகள் கூறுகின்றன.

தவிர பத்மாஸுரன், சிவ பெருமானை நோக்கி கடினமான தபஸ் செய்தான். சிவபிரான் ப்ரத்யக்ஷமாகி, ‘யாது வரம் வேண்டும் ’ என்று கேட்க, அவன் சாகாவரம் கேட்கவும், அது தர இயலாததால், அஹங்காரத்தால் மதி மறந்து, தனது சக்தியை யாராலும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பு கொண்டு “தான் யாருடைய தலைமேல் கை வைக்கிறேனோ அவன் பஸ்மமாகக் கடவது ” என்ற வரமும் பெற்று, அது சரியா என்று பார்ப்பதற்குச் சிவனிடமே பக்ஷிக்கத் துணியவும், இந்த நெருக்கடியில் விஷ்ணுவே மோஹினியாக ரூபமெடுத்து பத்மாஸுரனை, தந்திரமாக அவனே அவன் தலைமேல் கை வைக்கவும், பத்மாசுரன் பஸ்மாகிப்போனதும், பத்ம புராண வரலாறுகள் கூறுகின்றன.

அந்த மோஹினீ ரூபத்தைப் பரமேசுவரன் பார்க்க விரும்பி அதில் மோஹம் கொண்டு ஹரிஹரஸுதனாக ஐயப்பன் அவதாரம் செய்ததாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன. அவதாரம் செய்த பகவான் ஸகல வித்யைகளையும் பரமேசுவரரிடம் கற்றுக் கொண்டார்.

மஹிஷி எனும் அரக்கி தனது சகோதரன் வியோகத்தால் தேவர்களைத் துன்புறுத்தி ஒழிக்க வேண்டுமென்று எண்ணி, கடும் தவம் புரிந்து நடக்க முடியாததாகக் கருதி, சிவ விஷ்ணு புத்திரன், அவன் பன்னிரெண்டு ஆண்டு ப்ரஹ்மச்சர்யத்துடன் பூமியில் தாஸனாக வாழ்ந்தவனாகவும் இருக்க வேண்டும் என்றும், அவன் தனது உடலின் மேல் நர்த்தனமாடும் போதுதான் மரணம் ஏற்படவேண்டுமென்ற வரமும் வாங்கி, தேவர்கள் யாவரையும் துன்புறுத்தி தேவலோகத்தை அடக்கி, பலவிதமான அக்ரமங்களை செய்து வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட சைவ வைஷ்ணவ ஜ்யோதியான ஐயப்பன் பூலோகத்தில், பம்பா தீரத்தில் ஒரு குழந்தை வடிவம் பூண்டு அழும் தருணத்தில், பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகர மஹாராஜா காட்டில் வேட்டையாடி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், அழுகை சத்தம் கேட்கவும், அதி தேஜஸ்வியான குழந்தை பம்பா தீரத்தில் தனியாகக் கிடப்பதைக் கண்டு, எடுக்கவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஓர் அசரீரி கேட்கவும், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார்கள். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லக்ஷணங்களுடனும், கூடிய பாலகன் பிறந்தான். குமார ஜனனத்தால் எல்லோரும் ஸந்தோஷமடைந்தார்கள். ராஜசேகர ராஜனும் (பாலகனின் ச்ரேயஸ்ஸுக்காக) பல தான தர்மங்கள் செய்தார். ராஜராஜன் என்ற ராஜகுமாரன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எல்லா நற்குணங்களுடனும் வளர்ந்து வந்தான்.

மணிகண்டனின் வரவினால்தான் தனக்கு எல்லா நலன்களும் வருகிறதென புரிந்து கொண்ட ராஜசேகரன், ஐயப்பனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு, ஆலோசனை புரிந்ததை உணர்ந்த மந்திரி, ஐயப்பன், ராஜா வானால் தனக்கு எல்லா ஸௌகர்யங்களும் போய்விடும் என்று எண்ணி, ஐயப்பனின் வல்லமையை உணராது அவரைப் பலவிதமாகத் துன்புறுத்தி ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்காததால், தனது சூழ்ச்சியால், மஹாராணியை ஸம்மதிக்கவைத்து, புலிப்பால் கொண்டு வந்தால்தான் தனது தலைவி போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.

இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், தனது அவதார காரணார்த்தம், ராஜாவை ஸம்மதிக்கவைத்து, புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறார் ஐயப்பன். தனது குலதெய்வமான சிவனைப் பூஜை செய்ய வேண்டியதற்காக ராஜசேகரராஜன் ஒரு முடியில் முக்கண்ணுள்ள தேங்காய் வைத்து பூஜா சாமான்களும் வழியில் உபயோகத்திற்காகப் பின்முடிவில் ஆஹார ஸாதனங்களும் வைத்தனுப்பியதைப் போல் இன்று பக்தர்கள் இருமுடியுடன் வ்ரதமிருந்து செல்கிறார்கள்.

ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மஹிஷியினால் படும் துயரத்தைக் கூறவும், அதன் நிவர்த்திக்காக பகவான் தேவலோகம் சென்று மஹிஷியை தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ளவும், அந்த சரீரம் அலஸா (அமுதா) நதிக்கரையில் விழவும், அதன் மேல் நர்த்தனமாடி, மஹிஷியை உயிரிழக்கவும் செய்தார். ஸ்வயரூபமடைந்த முச்சக்திகளின் ரூபமான தேவி சைவவிஷ்ணு ஜ்யோதியுடன் கலக்க ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் ப்ரஹ்மசர்ய நிஷ்டையுள்ளவன், ஆதலால் அது ஸாத்யமாகாது என்றும், தனது வாமபாக திசையில் இருந்துகொண்டு தவம் செய்க, என்றும் கூறி அவதார கார்யத்தின் கடைசிக் கட்டத்தை நிறைவேற்ற கிளம்பினார். மஹிஷியின் உபத்ரவம் நீங்கியதால் ஸந்தோஷமடைந்த தேவர்கள் ஐயப்பனைப் பலவிதமாக துதித்து பூஜித்தார்கள். பிறகு யாவரும் புலிகளாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப், பந்தளம் செல்கிறார்கள்.

ஒரே புலிக்கூட்டம் வருவதை கண்டு ஜனங்கள் யாவரும் பீதியடைந்தார்கள் ராஜாவிடம் விஷயத்தை அறிவித்தார்கள். அமானுஷனான ஐயப்பனுக்குத் தீங்கு செய்துவிட்டோமே என்று அச்சம் ஏற்பட்டு, மந்திரி, ராணி, ராஜா யாவரும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

ஐயப்பன், “நீங்கள் யாவரும் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும், நீங்கள் எனது லீலையில் பங்கேற்றீர்கள்”, என்றும் கூறினார். ராஜாவிடம் தனது அவதார ரஹஸ்யத்தையும், சபரிமலையில் இருக்கும் க்ஷேத்திரத்தைப் புனருத்தாரணம் செய்யும் விதத்தையும், அது எவ்விடம் என அறிவதற்கு அஸ்த்ரம் எய்து அதை அறிவதற்கு திவ்ய (சக்ஷுஸ்ஸையும்) பார்வை கொடுத்து மற்ற எல்லா விஷயங்களும், உதவிகளும் பரசுராமர், அகஸ்த்யர், தேவர்கள் யாவரும் செய்வார்கள் என்று கூறி மறைந்தார். அப்பனை நினைத்து பந்தளத்திலும் ஒரு கோயில் அமைத்து, பூஜித்து வரும்படிச் சொன்னார். பகவானின் ஆணைப்படி கோயில் அமைக்கப்பட்டு பூஜைகளும் விதிப்ரகாரம் நடந்து வந்தன. பந்தள மன்னர்களின் தலைமுறைகள் ஐயப்பனை பூஜித்தும், வழிபட்டும் வந்தார்கள்.

ஒரு சமயம் உதயணன் என்ற கொள்ளைக்காரனின் உபத்திரவமும், அக்கிரமும் தாங்கமுடியாமல் இருந்தன. வாவரும் கடலோரப் பகுதிகளில் பணக்காரர்களிடமிருந்து வழிப்பறித்து மிக ஏழை மக்களுக்கு உதவி வந்தார். ஆனால் சிலர் இதனால் பயமும் பீதியுடனும் வாழ்ந்து வந்தார்கள். பந்தளராஜனிடம் முறையிட்டார்கள்.

அரண்மனையிலும் அச்சமயம் சில குழப்பங்களிலிருந்து வந்தன. ராஜாவின் சகோதரியை ஜயந்தன் நம்பூதிரி மணந்திருந்தார். அவர்களுக்கு அதி தேஜஸ்வியும் அமானுஷ்ய சக்தியுமுள்ள ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஐயப்பனென அழைக்கப்பட்ட அவன் வில்வித்தை, களரி முதலிய எல்லா வித்தைகளும் பயின்று, வாவரை அடக்கி, கொச்சு கடுத்தை, வலிய கடுத்தை, கருப்பன், வாவர் முதலியவர்களின் ஒத்துழைப்போடு உதயணனைக் வென்று தர்மத்தை நிலைநாட்டினார். தனக்கு உதவியவர்களுக்கு மான்யமாக வாவருக்கு எருமேலியிலும், கடுத்தைமார் கருப்பஸ்வாமி இவர் களுக்கு ஸன்னிதானத்தில் வீற்றிருக்கவும், தன்னை வழிபடவருபவர் அவர்களை வழிபட்டுத்தான் வர வேண்டும் எனவும் உத்தரவிட்டார். உதயணனை கீழடக்கச் சென்றபோது கறுப்பு வஸ்திரம் உடுத்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டும், அடையாளம் தெரியாதிருப்பதற்கு இலைகளை கட்டிக் கொண்டும் கோஷமிட்டு சென்றது. இப்போது “ பேட்டை துள்ளுதல்” எனக் கருதப்படுகிறது.

தங்களது விஜயத்திற்குப்பின் ஐயப்ப தரிசனத்திற்காகவும் வழிபடுவதற்காகவும் இருமுடி ஏந்திச் சென்றதையே தற்போது யாவரும் செய்து வருகிறார்கள். எல்லோரும் சரண கோஷம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஐயப்பன் ஜோதிரூபமாய் விக்ரஹத்தில் கலந்து விடுகிறார். “ஸ்வாமியே சரணம் ஐயப்பா ” என்ற சரணகோஷம் திக்கெங்கும் வ்யாபிக்கிறது.

சபரிமலையில் உள்ள 18 படிகள் வழியேதான். இருமுடியுடன் ஏறி ஐயப்பனை தரிசிக்க வேண்டும். ஹரிஹர ஸுதனே ஐயப்பன் ஹரியின் த்வாதச (12) அக்ஷரம், ஹரனின் பஞ்ச (5) அக்ஷரம் சேர்ந்து ஜோதி ஸ்வரூபன் (1) என்பதைக் (12+5+1 =18) குறிக்கும் வகையில் 18 படிகள் அமைந்துள்ளது என்பது வரலாறு.

ஸமஸ்தாபராத ரக்ஷகனே சரணம் ஐயப்பா.

ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜை

(வாழை இலை மீது பச்சரிசியை போட்டு, அதன் மீது விளக்குகளை வைக்கவும்.)

மூன்று விளக்குகளில் தீபம் ஏற்றி,

முதல் விளக்கில் கணபதியையும்

மூன்றாவது விளக்கில் சக்தியையும்,

நடுவிளக்கில் ஐயப்பனையும் ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும்.

ஐயப்ப மலைக்கு செல்பவர்கள் ஐயப்பனை ப்ரதானமாக வைத்து, ஐயப்ப பூஜையும்.

வழிநெடுக எந்த விக்னமும் இன்றி, பத்திரமாக சென்று, திரும்பி வர விக்னேச்வர பூஜையும்,

சக்தி இன்றி எதுவும் இல்லை என்ற தாத்பர்யத்தை உணர்த்தவும், யாத்திரை முடியும் வரை உடலுக்கும், மனதிற்கும் சக்தி தேவை என்பதை உணர்த்த சக்தி பூஜையையும், தனித்தனி விளக்கில் ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள்

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. நைவேத்ய பொருட்கள்: சாதம், நெய், பருப்பு, பாயஸம், உளுந்துவடை, அப்பம், இட்லி, கொண்டைக்கடலை சுண்டல், பட்சண வகைகள், தேங்காய், வாழைப்பழம், பானகம், பஞ்சாம்ருதம்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம் வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும்

(தியானம் +ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே (பக்கம் 12)

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம் (பக்கம் 12)

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement