தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 48 ஆண்டுகள் கோலாகலமாக மகாமகத் தேரோட்டம் நடந்தது.
மகா பிரளயத்துக்குப் பிறகு இத்தலத்தில் ஈசன் எழுந்தருளி, மண்ணையும், அமுதத்தையும் கொண்டு உருவாக்கிய லிங்கத்துக்கு பூஜை செய்து, அதில் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இங்கு ஈசனுக்குப் பெயர் ஆதிகும்பேஸ்வரர். மகாமகத் திருவிழாவின் முதன்மையான கோயிலாகத் திகழும் இக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா பிப்ரவரி 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் காலை, மாலை இருவேளையிலும் வீதி உலா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 1968-ல் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின்போது ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் போது மட்டுமே தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் 1968, 1980, 1992, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின்போது ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது நடைபெற உள்ள மகாமகப் பெருவிழாவை சிறப் பாகக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு தேரோட்டம், கடந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் மகாமகப் பெருவிழாவின்போது நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி, வரும் (பிப்.20) காலை 5 மணிக்கு விநாயகர், முருகன் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கும்பேஸ்வரர், அம்பாள் தேரோட்டம் மிக கோலாகலமாக பக்தர்களின் கூட்டத்தின் மத்தியில் நடந்தது.