மார்கழி 15ம் நாள் வழிபாடு.. எல்லே இளங்கிளியே

டிசம்பர் 30,2019



கோவை - சிறுவாணி சாலையில், சென்னனுார் கிராமத்திலுள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு திருப்பாவையின், 15ம் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புசென்னனுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், 500 ஆண்டுகள் பழமையானது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான கரிவரதராஜ பெருமாளை, நினைத்து மனமுருகி ஆயிரத்து எட்டு முறை ஆழிமழைக்கண்ணா என்று துவங்கும், திருப்பாவையை பாராயணம் செய்து வழிபட்டால், மழை பொழியும் என்பது நம்பிக்கை. வறட்சியின்போது விவசாயிகள் இப்படி வழிபட்டு, மழை பெற்று பயனடைந்ததாக ஐதீகம்.இக்கோவிலில் நாளை, காலை 5:00 மணிக்கு, எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியே என்று துவங்கும், திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்என்ன இனியும் பொழுது புலரவில்லையா, இனியும் துாங்குகின்றாயா? என்கின்றனர் பெண்கள். சிடு சிடு என பேசாதீர்கள். இதோ வந்து விட்டேன் என்றாள் துாங்கியவள். நீ மகா கெட்டிக் காரி. உன் சொற்படியே நாங்களும் கட்டுக்கதை பேசும் மகாகெட்டிக்காரிளாகவே இருப்போம்.எல்லாரும் வந்து விட்டீர்களா? நீயே எண்ணிப்பார்த்துக்கொள் என்கின்றனர் பெண்கள். இப்போது இவளும் எழுந்துவர, குவலயபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்துக்கொன்றவனும், எதிரிகளை நேருக்கு நேர் போரிட்டு அழிக்க வல்லவனும், மாயச்செயல்களை செய்வதில் சூரனுமான கண்ணபிரானைப் பாட விரைந்து வா என்கின்றனர் பெண்கள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்