நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஆராய்ச்சிக்குப்பம் மதுரைவீரன் கோவிலுக்கு பக்தர்கள் நுாற்றுக்கணக்கான கோழி, ஆடுகளை செலுத்தி நேர்த்தி கடனை நிறைவேற்றினர். நடுவீரப்பட்டு அடுத்த ஆராய்ச்சிக்குப்பம் மகா மாரியம்மன்,செல்லியம்மன், மதுரைவீரன் சுவாமி ஆலய 94ம் ஆண்டு மகா உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மதுரைவீரன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக ஆலயத்தில் நுாற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலிக்கு நேர்த்தி கடனாக விடப்பட்ட 70 ஆடுகள், 125 கோழி கள் ரூ.2.25 லட்சத்திற்கு நேற்று ஏலம் விடப்பட்டது.