பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை



 பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

அதனையொட்டி, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதனை தொடர்ந்து, இரவு 7.00 மணிக்கு கோவிலில் வடகிழக்கு திசையில் மேற்கு பார்த்து அருள் பாலித்து வரும் கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். செந்நிற மலர்கள் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்