மார்கழிப் பாடல்கள் பற்றி ராஜாஜி



மார்கழி மாதத்தில் விடியற் காலையில் எழுந்து பஜனை செய்வது நம் நாட்டு வழக்கம். அது எவ்வளவு சிறந்ததென்பதை ராஜாஜி சொல்கிறார்.

ஆயிரக்கணக்கான வருஷங்களாக மார்கழி மாதத்தில் நாமெல்லாம் சந்தோஷமாகக் காலத்தைக் கழித்து வந்ததாகத் தெரிகிறது. அந்த மாதத்தில் பாட்டுகள் பாடி, ÷ பரானந்தம் பெறுவது வெகு நாட்களாக ஏற்பட்டிருக்கிறது. பாட்டுக்காக நம் நாட்டில் இந்தப் பழக்கம் ஏற்படவில்லை. பெரிய மரத்தில் சிறு வெற்றலைக் கொடி ஏறி,  தனக்கு ஓர் அதரவைப் பெற்றுப் பிறருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. வெயிலை அடையக் கோல் தேடியோடும் கொடிபோல் பழைய வழக்கத்தின் பேரில்  பாட்டு ஏறிச் சந்தோஷத்தையும் இன்பத்தையும் தருகிறது. வாழ்க்கையை நடத்துகிறவர்களுக்குப் பக்தி இயற்கைச் சம்பத்து. மார்கழி மாதம் பக்திக்குச் சரியான  மாதம் வெயிலும் குளிரும் பக்குவமாகச் சேர்ந்த மாதம். தேகத்தைச் சரியாக வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து பக்தியுடன்  ஞானப் பாட்டுகளைப் பாடி ஞானத்தையும் உணர்ச்சியையும் புதுப்பித்துக் கொள்ளுகிறார்கள். பழைய நதிகள், பழைய குளங்களுடன் நம் ஆசாரியர்கள் லேசாக  நம்மை ஆட்கொள்ள இந்தப் பக்திப் பாட்டுகளைச் செய்தார்கள். குழந்தைகளுக்குப் பாட்டும், பெரியவர்களுக்கு ஞானமும், நிஷ்டையில் இருப்பவர்களுக்குப்  பக்தியும், எல்லாம் ஒன்றுதான்.

பகலெல்லாம் வாழ்க்கை நடத்தி விட்டு, ராத்திரி நாம் தூங்குகிறோம். தூக்கம் தானாக வந்துவிடுகிறது. இந்த இயற்கையான ஆச்சிரியத்தைப் பாருங்கள். இந்தத்  தூக்கத்தைக் விட்டுக் குளிர்காலத்தில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து பக்திப் பாடல்களை அனுபவித்து ரசித்து இன்புறுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான்  இருக்கும். ஆனால் இந்தத் தூக்கம் வேறு. பக்திப் பாடல்களிலே சொல்லப்படும் தூக்கத்தின் அர்த்தம் வேறு. அஞ்ஞானமாகிற தூக்கம் போக வேண்டும். இந்த இருள்  நீங்கினால் அகம்பாவம் குறையும் இது முக்கியமான உட்கருத்து. பக்திப் பாடல்களைப் படியுங்கள் தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தங்களையும் படியுங்கள். பாடத்  தெரிந்தால் மிகவும் சிலாக்கியம் தானாகவே ஆஸ்திகம் வரும். ஆண்டவனுடைய பிரபாவம் தெரியும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்