Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை (நவ., 20) நடைபெறும் ... விருதுநகர் சிவன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் விருதுநகர் சிவன் கோயிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’சபரிமலைக்கு சொந்த வாகனம் வாடகைக்கு இயக்கினால்...’ ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
’சபரிமலைக்கு சொந்த வாகனம் வாடகைக்கு இயக்கினால்...’ ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

19 நவ
2019
01:11

திருப்பூர்:’சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வாடகைக்கு இயக்கினால், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,’ என ஆர்.டி.ஓ.,க்கள் எச்சரித்துள்ளனர்.

சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை உறவினர், நண்பர் அழைக்கும் போது அல்லது வேறுநபருக்கு சுற்றுலா என்ற பெயரில் வாடகைக்கு இயக்குகின்றனர்.இதனால், வாடகை கார் ஓட்டிகள் வேலையிழப்பு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வட்டார போக்குவரத்து துறையினர் விதிமுறை மீறும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.இந்நிலையில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ’ஐயப்ப பக்தர்கள் கவனத்துக்கு, சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்துக்கு சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் சென்றால், மோட்டார் வாகன சட்டம், 1088 பிரிவு, 192 (ஏ) படி குற்றமாகும்.விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு, 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப் படும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆர்.டி.ஓ., முருகானந்தம் கூறுகையில்,’ சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கிறோம். விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.வடக்கு ஆர்.டி.ஓ., குமார் கூறுகை யில்,’தீபாவளி, சபரிமலை சீசனை ஒட்டி சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பலரும் இயக்குவதாக புகார் வந்துள்ளது.அதன் பேரில் சோதனை நடத்தி வருகிறோம். விதிமீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்,’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar