Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீமுஷ்ணத்தில் மிலாது நபி மாநாடு கீழக்கரை மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு ரூ.3 லட்சத்தில் ஷவர் குளியல் வசதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு ரூ.3 லட்சத்தில் ஷவர் குளியல் வசதி

பதிவு செய்த நாள்

23 நவ
2019
01:11

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானை ஆண்டாளுக்கு, கோவில் வளாகத்திற்குள்ளேயே ‘ஷவர்’ அமைத்து குளியலுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்வுகளில், யானை ஆண்டாள் பங்களிப்பு இருக்கும். எனவே, ஆண்டாள் பராமரிப்புக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கோவில் யானையை, பாகன்கள் குளிக்க வைத்தனர். கோடை காலத்தில், திருச்சியில், 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் நிலவும். அந்த காலக்கட்டத்தில், குழாய்களில் வரும் தண்ணீரை பீய்ச்சியடித்து, கோவில் யானையை குளிக்க வைக்கும் நிலை இருந்தது.

இந்த சிரமத்தை தவிர்க்க,  கோவையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், ‘ஷவர்’களுடன் கூடிய குளியல் வசதி செய்து தர முன்வந்தார். அதன்படி, வேணுகோபால் சன்னதிக்கு பின்னால், அன்னதான மண்டபத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளி கல் மேடையில், 400 சதுர அடி பரப்பில், 3 லட்சம் ரூபாய் செலவில், ‘ஷவர்’ குளியல் சாதனங்கள் நிறுவப்பட்டது. மோட்டார் பம்ப் மூலம், 18 அடி உயரத்திற்கு குழாய்களில் ஏற்றப்படும் தண்ணீர், 10 ஷவர்களில் துாறல்களாக கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஷவர்’களுக்கான தண்ணீர்  ஓட்டத்தை கட்டுப்படுத்த வால்வு பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ‘ஷவர்’, கோவில் யானையை குளிக்க வைக்க, நேற்று, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. புதிதாக நிறுவப்பட்ட ‘ஷவர்‘ குளியல், மழையில் குளிப்பது போன்ற அனுபவத்தை அளிப்பதால், 41 வயதான ஆண்டாள், நேற்று உற்சாகமாக காணப்பட்டது. திருவனைக்காவல் ஜம்புகேஸ்வரர்– அகிலாண்டேஸ்வரி கோவில் யானை அகிலாவுக்கு, கடந்த மே மாதம் ஷவர் வசதி செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar