Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலம்பரை கோட்டையில் 900 ஆண்டுகளுக்கு ... பிறவி மருந்தீசர் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தானத்தால் வென்று நின்றவன் கர்ணன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
11:04

திருப்பூர்: தா, பிதா, குரு, தெய்வம் ஆதரவு இல்லை என்றாலும், தானத்தால் வென்று நின்றவன் கர்ணன், என ஆன்மிக சொற்பொழிவாளர் சத்தியசீலன் பேசினார். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில் ஆன்மிக சொற்பொழிவு, திருப்பூர் குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. "ஒரு கொடையே தவம் ஆகிறது என்ற தலைப்பில் சத்தியசீலன் பேசியதாவது: ஒரு உயிருக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என நான்கு துணை உண்டு. கர்ணனுக்கு தாய் துணை இல்லை; தந்தை யார் என்று தெரியாது. தேரோட்டி மகனாக வளர்கிறான். வில் வித்தை போட்டியில் விளையாட, அரச குலத்தினர் மறுப்பு தெரிவித்தபோது, துரியோதணன் ஆதரவு கொடுக்கிறான். பரசுராமன், கர்ணன் ஒரு அந்தணர் இல்லை; சத்திரியன் என்று தெரிந்ததும், நீ கற்றது அனைத்தும் உரிய நேரத்தில் மறந்து போவாய் என சாபமிடுகிறார். இதன் மூலம் கர்ணனுக்கு "குரு பாதுகாப்பும் இல்லாமல் போய்விடுகிறது. ரத போர் நடக்கிறது. காயம்பட்டு கர்ணன், கீழே கிடக்கிறான். தர்மம் கேட்டு கிருஷ்ணர், அந்தணர் வேடத்தில் வந்து தானம் கேட்கிறார். என்னிடம் இருப்பதை கேள் தருகிறேன் என கர்ணன் கூறுகிறான். இறைவனே கையேந்திய வரலாறு கர்ணனின் வரலாற்றில் வருகிறது. புண்ணியத்தை தானமாக கேட்கிறான், அந்தணர். அனைத் தையும் கொடுக்கிறான் கர்ணன். தானம் கேட்டு வந்த கிருஷ்ணன் கையில் கர்ணனின் ரத்தம் பட்டதும், கிருஷ்ணனுக்கு தானம் கொடுக்கும் குணம் வந்து விடுகிறது. "உனக்கு என்ன வேண்டும் கேள், என, கிருஷ்ணன் கேட்கிறார். "தானம் கேட்டு வருபவர்களுக்கு தானம் கொடுக்கும் இதயத்தை கொடு, என்கிறான் கர்ணன். தன்னம்பிக்கை இல்லாதவனால் சம்பாதிக்க முடியாது. கடவுளை நம்பாதவன் நாத்திகன் அல்ல; எவன் தன்னை நம்பவில்லையோ, அவன்தான் நாத்திகன். கர்ணன் தன்னை முற்றிலும் நம்புகிறான். கிருஷ்ணர் கர்ணனிடம் இதயத்தை தருகிறேன்; முக்தியும் பெறுவாய், என்றார். மரணத்தை கண்டு அஞ்சக்கூடாது. நான் செய்த காரியங்களை தெரிந்து கொண்டு நான் எங்கே போகிறேன். என தெரிந்தவன் கர்ணன். தாழ்ந்தவன், ஜாதி, மதத்தை கூறி இழிவு செய்யப்பட்டதால், அவன் தீயவனிடம் சென்று சேர்கிறான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு பேர் ஆதரவு இல்லை என்றாலும், கொடை, தானத்தால் வென்று நின்றவன் கர்ணன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar