Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் சித்திரை திருவிழா ... கோவையில் சத்யசாய் பாபாவின் முதலாமாண்டு ஆராதனை மகோத்சவம்! கோவையில் சத்யசாய் பாபாவின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லை கோவிலில் கும்பாபிஷேகம்: சிருங்கேரி பீடாதிபதி பங்கேற்கிறார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஏப்
2012
10:04

திருநெல்வேலி: கர்நாடக மாநிலம் சிருங்கேரி சங்கர மடத்தின், 36வது பீடாதிபதி ஜெகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள், தமிழகத்தில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். அவர் கேரளாவில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவிலில் விழாக்களில் பங்கேற்றார். 17 ஆண்டுகளுக்கு பிறகு, நெல்லை சந்திப்பு சிருங்கேரி சாரதா மண்டபத்துக்கு, பாரதி தீர்த்த சுவாமிகள் வருகை தந்துள்ளார். அவருக்கு, மங்கள வாத்தியம் முழங்க, பூர்ண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. அவர் பேசுகையில், ""நெல்லை மாநகரில் சங்கர ஜெயந்தி விழா, 3வது முறை நடக்கிறது. அதாவது கடந்த, 1957, 1987ல் நடந்த நிகழ்ச்சியில், சிருங்கேரி சங்கர மடத்தின் சுவாமிகள் வந்து இருக்கிறார்கள். தற்போது நடைபெறும், சங்கர ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. நெல்லை பக்தர்கள் செய்த புண்ணியம் தான் இங்கு, 3 முறை சங்கர ஜெயந்தி விழா நடந்து இருக்கிறது. ராமர் பிறந்தநாளை ராமநவமியாக கொண்டாடுவது போல், கிருஷ்ணர் பிறந்தநாளை கோகுலாஷ்டமி என கொண்டுவது போல், ஆதி சங்கரர் பிறந்தநாளை சங்கர ஜெயந்தி விழாவாக கொண்டாட வேண்டும். இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும். மனிதர்களுக்கு நன்றி மறவாத குணம் அவசியம். ஒவ்வொரு மனிதனும் தனக்கு உதவி செய்தவர்களை மறக்கக் கூடாது. அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த குணங்கள் மனிதனை மேலும் வளர்க்கும், என்றார். நேற்று மாலையில், தியாகராஜ நகர் சாரதா மண்டபத்தில் உள்ள கோவிலுக்கு விஜயம் செய்தார். அங்கும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடந்தது. கோவிலில், வரும் 29ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதுவரை சுவாமிகள் அங்கேயே தங்கி, சிறப்பு பூஜைகள் மேற்கொள்கிறார். இன்று (21ம் தேதி) மாலையில், நெல்லையப்பர் கோவிலில் தங்கத் தேரோட்டத்தை நடத்துகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar