Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் ... மணலி, அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் மணலி, அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதி உலா
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதி உலா

பதிவு செய்த நாள்

07 டிச
2019
11:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த ஆறாம் நாள் தீப திருவிழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்ந்த, 63 நாயன்மார்களை போற்றும் வகையில், நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இதில், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட, 63 நாயன்மார்கள் சிலைகள் மாடவீதியில் வலம் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து யானை வாகனத்தில், விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி ஆச்சி விமானத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், 54 அடி உயர வெள்ளி மஹா ரதத்தில் உண்ணா முலையம்மன் சமேத அருணாசலேசுவரர், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar