Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட ... ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 டிச
2019
12:12

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிப்., 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், சுவாமி விக்ரகங்களுக்கு மா காப்பு செய்யப்பட்டது.

கடந்த, 1997ல், தஞ்சாவூர் பெரிய கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 23 ஆண்டுகள் கழித்து, வரும், பிப்., 5ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அதற்காக, 2ம் தேதி, பாலாலயம் நடத்தப்பட்டு, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் முன் திரையிடப்பட்டது. மேலும், கும்பாபிஷேகத்துக்கு, எட்டு கால யாகசாலை பூஜைகள் நடத்த வசதியாக, கோவில் அருகே யாகசாலை பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

கோவிலின் சன்னதி மற்றும் திருச்சுற்று மாளிகையில் உள்ள ஈசானமூர்த்தி, சிவலிங்கங்கள் - 252, விநாயகர் சிலைகள் - 12, முருகன் சிலைகள் - எட்டு மற்றும் சப்தக்கன்னிகள் அடங்கிய, சிலா மூர்த்திகள் என, 338 விக்ரகங்களுக்கு நேற்று, மா காப்பு துவங்கியது.மொத்தம், 450 லி., தயிர், 200 கி., பச்சரிசி மாவு ஆகியவற்றால், மா காப்பு தயாரிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, மா காப்பு அகற்றப்பட்டு, எண்ணெய் காப்பு சாத்தப்படும். 50க்கும் மேற்பட்ட சிவ தொண்டர்கள், இந்த உழவார பணிகளில் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் டி.ஐ.ஜி., லோகநாதன், எஸ்.பி., மகேஸ்வரன் ஆகியோர், நேற்று, கோவில் முழுவதும் ஆய்வு செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதற்கட்டமாக பக்தர்கள் வந்து செல்லும் வழி, வாகனங்கள் நிறுத்தும்மிடத்தை தேர்வு செய்து வருகிறோம். பக்தர்கள், கோவிலுக்குள்ளும், வெளியே நின்றும், கோபுரத்தை தரிசிப்பர். அதனால், தரிசன இடங்களையும் தேர்வு செய்து வருகிறது. எவ்வளவு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பது குறித்து, விரைவில் தெரிவிக்கப்படும்.லோகநாதன், டி.ஐ.ஜி., தஞ்சாவூர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar