Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை முருகன் கோவிலில் ... திருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம் திருப்பரங்குன்றத்தில் மலை மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2019
06:12

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவான, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க  மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று  2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அண்ணாமலையார் மூல கருவறையில், சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க, நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது. பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து மடக்குகளில், தீபம் ஏற்றப்பட்டது.

அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்பட்டு, முதல் பிரகாரத்தில் வலம் வந்தபோது, பக்தர்கள் பரவசத்துடன், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி, வழிபட்டனர். கோவிலில் உள்ள, அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின், ஐந்து அகல் விளக்குகளையும், கொடி மரத்தின் முன்பாக உள்ள, அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர்; பின், ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அதை அடுத்து, மாலை, 6:00 மணிக்கு, மலை மீது, மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம், தொடர்ந்து, 10 நாட்கள் எரியும். இது, சுற்றுவட்டாரத்தில், 40 கி.மீ., தூரம் வரை தெரியும். கோவில் வளாகம் முழுவதும், வண்ண விளக்குகளாலும், பிரகாரம், தங்க கொடிமரம், தீப தரிசன மண்டபம் என, கோவில் முழுவதும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்கொள்ள காட்சியாக இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar