Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ... திருப்பரங்குன்றத்தில் மலைமேல் மகா தீபம் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 டிச
2019
10:12

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளையொட்டி, நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:00 மணிக்கு, பால், தயிர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, தங்க கவசத்துடன் சுப்பிரமணிய சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மருதமலையில், கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். காலை, 11:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். கார்த்திகை தீபத்திருநாளில் முக்கிய நிகழ்ச்சியான, திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, தீப கம்பத்தில் மகா தீப விளக்கு ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி தங்க தேரில் திருவீதியுலா வந்தார். கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி மருதமலையில் நேற்று, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். தீபத்திருநாளையொட்டி, 170க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar