Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் ... வரும் 26ல் சூரிய கிரகணம்: ஈரோட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2019
02:12

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு, படி வழியாக புனித நீர் கொண்டு செல்வதற்கு, புது காளைக்கு பயிற்சி தரப்படுகிறது.

சென்னிமலை முருகன் மலை கோவிலுக்கு, அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து, தினமும் காலை, 8:00 மணி பூஜைக்கு, பொதி காளை மூலம், 1,320 படிவழியாக புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது. காலை, 7:00 மணிக்கு கிணற்றில், குடங்களில் தீர்த்தம் எடுத்து, பொதி காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைக்கப்படும். கோவில் பணியாளர்கள் காளை மாட்டை ஓட்டி செல்வர். இதற்காக கோவில் கோசாலையில், இரண்டு பொதி காளை பராமரிக்கப்படுகிறது. தற்போது ஒரு காளைக்கு வயதாகி விட்டதால் சிரமப்படுகிறது.

இந்நிலையில் கோவிலுக்கு பக்தர் ஒருவர் தானம் கொடுத்த, காளை மாட்டுக்கு, தீர்த்தக்குடம் சுமந்து செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக, வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன், புது காளையையும் ஓட்டி சென்றனர். படி வழியாக செல்வதற்கு, படிப்படியாக பயிற்சி தரப்படுகிறது. படியில் ஏறுவதற்கு மிரளாமல், முரண்டு பிடிக்காமல், கால்களில் சலங்கை கட்டியபடி, சப்தஸ்வரங்களாக மணிகள் ஒலிக்க, காளை செல்லும் அழகை, காலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து வியந்தனர். சில மாதங்களில், நன்கு பயிற்சி பெற்று விடும் என்று, பணியாளர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar