Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முப்புடாதியம்மன் கோயிலில் இன்று மகா ... முனியப்பன் கோவிலில் மண்டல பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் சித்திரை விழா காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2012
12:04

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று சித்திரை கிருத்திகை விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விமரிசையாக கொண்டாடப்படும் கிருத்திகைகளில், சித்திரை கிருத்திகை பிரதானமானது.

வண்ணக் காவடிகள்: நேற்று சித்திரை கிருத்திகையையொட்டி, சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிராக்டர், வேன், மாட்டு வண்டி போன்ற வாகனங்களில் குவிந்தனர். நள்ளிரவு முதல் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து, சரவணப் பொய்கையில் நீராடினர். காவடி மண்டபத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர், உடலில் அலகு குத்தி, பலவித வண்ணக்காவடிகள் எடுத்து ஊர்வலம் வந்தனர். நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர். பல்வேறு திருச்சபைகளின் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், தீப தூப ஆராதனை நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில், கந்தபெருமான் வீதியுலா நடந்தது. பக்தர்களின் தாகம் தீர்க்க, பேரூராட்சி சார்பில் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. போலீசார் வாகனங்களை முறைப்படுத்தாததால், திருப்போரூரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar