Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் ... வைகுண்ட ஏகாதசி: திருமலையில் பக்தர் கூட்டம் வைகுண்ட ஏகாதசி: திருமலையில் பக்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மிக அபூர்வம்: ஜன.,14ல் நடை அடைப்பு இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மிக அபூர்வம்: ஜன.,14ல் நடை அடைப்பு இல்லை

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
10:01

சபரிமலை : சபரிமலையில் மிக அபூர்வ சம்பவமாக ஜன.14ம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை. மறு நாள் அதிகாலை மகர சங்கரமபூஜைக்கு பின்னர் அதிகாலை 2:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும். பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இந்த ஆண்டு சூரியன் மகரராசிக்கு ஜன.15 அதிகாலை 2:09 மணிக்கு கடக்கிறது. இதனால் ஜன.14 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஜன.15 அதிகாலை 1:45 மணிக்கு மகர சங்கரம பூஜைக்கான ஆயத்தங்கள் துவங்கும். 2:09 மணிக்கு இந்த பூஜை நடந்த பின்னர் 2:30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

ஜன.15 அதிகாலை 3:00 மணிக்கு பதிலாக 4:00 மணிக்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு பின்னர் திருவாபரணங்கள் வந்து தீபாராதனை முடிந்த பின்னர் தான் பக்தர்கள் படியேற முடியும். ஒரு நாள் திறக்கப்பட்ட நடை அன்று அடைக்கப்படாமல் அடுத்த நாள் அதிகாலை வரை திறந்திருப்பது சபரிமலையில் மிக அபூர்வமானது என பக்தர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar