Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... நரசிங்கபுரம் பெருமாள் கோவிலில் கருடசேவை நரசிங்கபுரம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

07 ஜன
2020
11:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணிய கால கொடியேற்றம் நடந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், தீப திருவிழா, ஆனி பிரம்மோற்ஸவம், மார்கழி மாத உத்திராயண புண்ணிய காலம் ஆகியவைகளுக்கு கொடியேற்றம் நடக்கும். அப்போது, சுவாமி சன்னதி முன்புள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூர விழாவிற்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திலும், கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் மார்கழி மாத, உத்திராயண புண்ணியகால பிரம்மோற்ஸவம் நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மேளதாளம் முழங்க, தங்கக்கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னதி முன்புள்ள, 63 அடி உயர தங்கக்கொடிமரத்தில், தனூர் லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவை தொடர்ந்து, பத்து நாட்கள் காலை, இரவில் சுவாமி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், 15ல், தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி, 16ல் திருவூடல், 17ல் மறுவூடல் விழா நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar