Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை ... ஆதிநாராயண சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோயிலில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2012
11:04

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை "பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை "பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை சந்திரசேகரசுவாமி, கோயில் யானை கோமதியுடன் திருவிழாவிற்கான பிடிமண் எடுப்பதற்காக அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு மதியம் சந்திரசேகரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் யானை "பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோமதி யானை மண்வெட்டியால் பூமியில் வெட்டி திருவிழாவிற்கான "பிடிமண் எடுத்தது. மாலையில் "பிடிமண்ணுடன் கோயிலுக்கு திரும்பிய சந்திரசேகர சுவாமிக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக பெண்கள் வீட்டு வாயிலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு இருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் கோயில் அலுவலக கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, உள்துறை கண்காணிப்பாளர் முருகானந்தம், பணியாளர் சங்கம் மழவராயன், பணியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் தாமோதரன், ஏ.எஸ்.பி.,மகேஸ் ஆகியோர் சட்டம், ஒழுங்கை கண்காணித்தனர். நேற்று காலை சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. 4ம் திருநாளான 28ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 63 நாயன்மார்களுக்கு, சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் திருநாளான 29ம் தேதி இரவு 8 மணிக்கு தங்க சப்பரத்தில் அம்பாளும், வெள்ளி சப்பரத்தில் சவாமியும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் திருநாளான மே 1ம் தேதி இரவு 8 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி பிரம்மாம்ச தரிசனமும், இரவு 12 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தி ருத்ராம்ச தரிசனமும், 2ம் தேதி காலை 6 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி விஷ்ணுவாம்ச தரிசனமும் நடக்கிறது. 9ம் திருநாளான காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ராஜாமணி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar