Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தரணி போற்றும் தமிழர் திருவிழா! தியாகராஜருக்கு 173வது இசை அஞ்சலி தியாகராஜருக்கு 173வது இசை அஞ்சலி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கல் கோலாகலம்: பாரம்பரியத்துடன் உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2020
01:01

மதுரை: தமிழகம் முழுவதும் தை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ண தோரணங்களால் வீதியை அலங்கரித்து, புதிய மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து, மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது, அனைவருக்குமான ஆறுதல் வார்த்தைகளாக மட்டும் இருப்பதில்லை. அறுவடை மூலமாக குடும்பம் செழிக்கும் என்பதால், கஷ்டத்தை தீர்க்க உண்மையாக வழி கிடைக்கிறது. ஒளியை கொடுத்து, தானியங்களை விளைவித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில், விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்துதரப்பு மக்களும் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர்.

Default Image
Next News

தமிழர் திருநாள் என்று போற்றப்படுவதால், தமிழகம் முழுவதும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், பொங்கல் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. பொங்கல் விழா, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என, மூன்று நாட்களும் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளும் கொண்டாடப்படுகிறது. இளைஞர் அமைப்புகள், நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் சார்பில், கிராமம் தோறும், வீதிகள் தோறும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வீதிகளில், எங்கு பார்த்தாலும், வீட்டு வாசலில், பெண்கள் வண்ண கோலமிட்டு, தை மகளை வரவேற்று மகிழ்ந்தனர். அதிகாலை, குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக பச்சரிசியில் பொங்கல் வைத்து  வழிபாடு நடத்தினர்.  செங்கரும்புகளை பொங்கல் வைக்கும் இடங்களில், கூடாரமாக நிறுத்தி வைத்திருந்தனர். பொங்கல் தயாரானதும், தலைவாழை இலையில், சர்க்கரை பொங்கலை படைத்து, அவல், பொரி, முறுக்கு போன்ற பதார்த்தங்களை படைத்து, தேங்காய், பழவகைகள் வைத்து வழிபட்டனர். அதன்பின், இனிப்புகளை அனைவருக்கும் கொடுத்து, பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar