Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவிலில் 30 ஆண்டுகளுக்கு ... மகரஜோதி தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூடி கொடுத்த சுடர் கொடிக்கு ஏழுமலையான் மாலை
எழுத்தின் அளவு:
சூடி கொடுத்த சுடர் கொடிக்கு ஏழுமலையான் மாலை

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
10:01

திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு சூட்டிய மாலை, ஆண்டாள் பரிணய உற்சவத்தின் போது அணிவிக்க திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நடத்தப்பட்டது. வழிபாட்டு நிறைவில் ஆண்டாள் நாச்சியார் திருமாலுடன் இணையும் கோதா பரிணய உற்சவத்தை தேவஸ்தானம் மாட்டுப்பொங்கல் தினத்தன்று நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று மாலை ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோவிந்தராஜஸ்வாமி கோவிலில் நடந்தது.

அந்த திருக்கல்யாண உற்சவத்திற்காக, ஏழுமலையான் சூடிய மாலை ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்க திருமலையிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. திருமலை ஜீயர்கள் ஏழுமலையானுக்கு மாலை அணிவித்து, அதை மீண்டும் எடுத்து புதிய மூங்கில் கூடையில் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோவிலுக்கு அனுப்பினர். அன்று மாலை, திருக்கல்யாணத்தின் போது அம்மாலை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. பிரம்மோற்சவ கருட சேவையின் போது, சூடி கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொள்ளும் ஏழுமலையான், ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது தான் சூடிய மாலையை ஆண்டாளுக்கு அனுப்பி வைப்பது கைங்கரியத்தில் ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar