Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு காலபைரவர் கோவிலில் பூசணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
11:01

புன்செய்புளியம்பட்டி: மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, மாதேஸ்வரர் மலை கோவிலில், மண் உருவ சிலைகளை வைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது.

புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. மாடுகளுக்கு நோய் ஏற்பட்டால், அதன் உருவ பொம்மை வாங்கி வைத்து மாதேஸ்வரரை வழிபட்டால், நோய் நீங்குவது ஐதீகமாக இருந்து வருகிறது. பொங்கல் துவங்கியதில் இருந்து, மூன்று நாட்கள் மாடுகள் கருவுற்று பிறந்தால், அந்த கன்றுகளை கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. கால்நடைகள் நோயின்றி வாழ, மாட்டுப்பொங்கல் நாளன்று, மாடுகளின் உருவ சிலைகளை, புன்செய்புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமம், மாதேஸ்வரர் மலை கோவிலில் வைத்து வழிபடுவது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. நேற்று முன்தினம் பல்வேறு கிராமங்களில், மாடுகளுக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாதேஸ்வரர் மலை கோவில் முன் நிறுத்தி, கோபூஜை செய்யப்பட்டது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகள், நோயின்றி சுகமாக வாழ நேர்த்திக்கடனாக, இரண்டு அடி உயரமுள்ள மாடு உருவத்திலான மண் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். இதற்காக, மண் சிலைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், நேரடியாக கோவிலுக்கு வந்து, மண்சிலைகளை வைத்து, பூஜை செய்து கண் திறந்து வைத்தனர். ஒரு அடி உயரமுள்ள சிலை, 300 ரூபாய், இரண்டு அடி உயரமுள்ள சிலை, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விழாவையொட்டி மாதேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மூலவர் மாதேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar