Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் ... விக்கிரவாண்டியில் ஆற்றுத் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மசூதியில் நடந்த ஹிந்து திருமணம்: மத ஒற்றுமைக்கு உதாரணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மசூதியில் நடந்த ஹிந்து திருமணம்: மத ஒற்றுமைக்கு உதாரணம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
10:01

ஆலப்புழா: கேரளாவில், மசூதியில், ஹிந்து முறைப்படி, ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார். தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறார், பிந்து. இந்நிலையில், தன் மகள் அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க, பிந்து ஏற்பாடு செய்தார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நிஜுமுதீன் அலுமூட்டிலிடம், உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், அலுமுட்டி ஆலோசனை நடத்தினார். பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது.

அஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்திலேயே, ஹிந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜன.,19) காலை, செருவாலி மசூதியில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், ஹிந்து முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தது. திருமணத்துக்காக, ஜமாத் சார்பில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, சைவ உணவு விருந்து தயாரிக்கப்பட்டது.

திருமணத்தில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் அளவில் பங்கேற்று, விருந்து சாப்பிட்டு, மணமக்களை வாழ்த்தினர். மசூதியில் ஹிந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.பேஸ்புக் சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக, கேரளா எப்போதும் விளங்குகிறது. மதத்தின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என, கூறியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar