Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை முதல் ஞாயிறு: ஆஞ்சநேயருக்கு பூஜை ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி கிராம மக்கள் வனதுர்க்கைக்கு கூழ் ஊற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
11:01

கிருஷ்ணகிரி: மழை வேண்டி, வனதுர்க்கை கங்கம்மாவுக்கு கூழ் ஊற்றி, ஆடு பலியிட்டு கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், கல்லுக்குறுக்கி பஞ்., மலையோரம் கொல்லப்பட்டி கிராம மக்கள், மலைக்குகையில் உள்ள வனதுர்க்கை கங்கம்மா சுவாமியை, 300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வந்தனர். இந்த சுவாமி சிலைக்கு அருகில், இயற்கை நீரூற்றில் இருந்து, எப்போதும் வற்றாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. ஆனால் கடந்த, 35 ஆண்டுகளாக வனதுர்க்கை கங்கம்மாவை கிராம மக்கள் வழிபடாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஏரி, குளங்களில் தண்ணீரின்றியும், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எனவே மழை வேண்டியும், ஏரிகளில் தண்ணீர் நிரம்ப வேண்டியும், வனதுர்க்கை கங்கம்மாவுக்கு கூழ் ஊற்றி, ஆட்டை பலியிட கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று காலை கிராம மக்கள் கூழ் சுமந்து, மேள தாளத்துடன் கங்கம்மா கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வனதுர்க்கை கங்கம்மாவுக்கு அபிஷேக, அலங்காரம் செய்து, பொங்கல் படையலிட்டு, ஆட்டை பலியிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் ஆட்டை அங்கேயே சமைத்து, கிராம மக்கள் அனைவருக்கும் விருந்தளித்தனர். இதனால், கிராமத்தில் மக்கள் இன்றி வெறிச்சோடியது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், அம்மனுக்கு கூழ் ஊற்றி, ஆட்டை பலியிட்டு படையல் வைத்துள்ளோம். இதனால் மழை பெய்து, ஏரி, குளங்கள் நிரம்பும் என நம்புகிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் அம்மனுக்கு திருவிழா நடத்த முடிவெடுத்துள்ளோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar