Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முள் புதருக்குள் சேதுபதி மன்னர் ... வீரராகவர் கோவிலில் கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு: சபரிமலை நடை அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு: சபரிமலை நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
11:01

சபரிமலை: 60 நாட்கள் நடந்த மண்டல, -மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவு பெற்று சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. திருவாபரணங்கள் பந்தளம் திரும்பியது.

சபரிமலையில் ஜன.15-ல் மகரவிளக்கு விழா நடந்தது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடந்தது. ஜன.16 முதல் 19 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடந்தது. ஜன.19- காலை 10:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று மதியம் களபபூஜை நடந்தது.ஜன.20 காலை 5:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவுற்றது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடந்தது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் இந்த பூஜையை நடத்தினர்.நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி திலிப்குமார் வர்மா முன்னிலையில் கோயில் நடைஅடைத்த பின்னர் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படி வழியாக கீழ்பகுதிக்கு வந்தனர். அங்கு கோயில் சாவியையும், பணமுடிப்பையும், மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி கொடுத்தார். அவர் அதை மீண்டும் அவரிடமே கொடுத்து, வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும், என்று கூறி திருவாபரணங்களுடன் திரும்பி சென்றார்.இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்.13-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar