Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணங்களால் களைகட்டிய ... ஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: மருந்து  இடிக்கும் நிகழ்ச்சி ஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளில் தஞ்சை கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளில் தஞ்சை கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
02:01

மதுரை: தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின்னர், பிப்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழா, பூர்வாங்க பூஜையுடன் நேற்று (ஜன.,27) துவங்கியது. இதற்கிடையே, கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் நடத்தகோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல், தொல்லியல் துறையின் அனுமதி பெறாததால் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என புதிய மனுவும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (ஜன.,27)நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் போது, கடந்த நவம்பர் மாதமே 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை வாதிட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கும்பாபிஷேகத்தை தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியிலும் நடத்தப்படும். இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கும்பாபிஷேகம் என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், கும்பாபிஷேகத்திற்கு தடைக்கோரிய வழக்கையும் முடித்து வைத்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar