Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: ... தேவதானப்பட்டி ஆதி காசி லிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா தேவதானப்பட்டி ஆதி காசி லிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
03:01

திருவாரூர்: ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பணி பணிகளை ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆய்வு செய்தார்கள்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி (கும்பகோணம்) அருகில் குரு ஸ்தலத்தை அடுத்துள்ள ஞானபுரீயில் சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் உத்தரவின்பேரில் ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தால் இக்கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 இந்த கோவிலில் 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளான மிருத சஞ்சீவினி, விசல்ய கரனீ, ஸாவர்ண கரனீ, ஸந்தான கரனீ ஆகிய மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. கோவிலில் 108 அடி உயர பஞ்சதள விமானம், ஆஞ்சநேயர் சன்னதி முன்பு பிரம்மாண்ட கர்ப்பகிரகம் அர்த்த மண்டபம், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் சன்னதிகள், மடப்பள்ளி ஆகியவற்றின் திருப்பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று கோவிலுக்கு எழுந்தருளிய ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவில் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் வரும் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி எட்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. அதனையடுத்து பிப்ரவரி 7ம் தேதி வெள்ளிக்கிழமை மீன லக்னத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு மகா சுவாமிகள் திருக்கரங்களால் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar