Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் கங்கா, ... தைப்பூச விழாவிற்கு 40 சிறப்பு பஸ்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறருக்கு கொடுப்பதே உண்மையான சந்தோஷம்! மாதா அமிர்தானந்த மயி அருளாசி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2020
01:01

சென்னை : உலகில் இருந்து நமக்காக எடுத்துக் கொள்வதை விட, பிறருக்கு கொடுக்கும் போது தான் உண்மையான சந்தோஷம், மனநிறைவு, வளர்ச்சி ஏற்படுகிறது, என, சென்னைக்கு விஜயம் செய்துள்ள, மாதா அமிர்தானந்த மயி தெரிவித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பிரபல ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்தமயி; 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அருளாசி வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு, இரண்டு நாள் பயணமாக, சென்னை விஜயம் செய்துள்ளார். சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தில், பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து, நேற்று அவர் அருளாசி வழங்கியதாவது: உலகில் இருந்து நமக்காக எடுத்துக் கொள்வதை விட, பிறருக்கு கொடுக்கும் போதுதான் உண்மையான சந்தோஷம், மனநிறைவு, வளர்ச்சி ஏற்படுகிறது. இன்று பறவை போல பறக்கவும், மீன்களை போல நீந்தவும் கற்றுக் கொண்ட நாம், மனிதனை போல வாழ மறந்து விட்டோம். நம் மனம், பாராசூட் போன்றது; அதை திறந்தால் நம்மையும், மற்றவர்களையும் காப்பாற்றும். நம்வாழ்வில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய இழப்பு, பிறருக்கு தொண்டு செய்யும் வாய்ப்பை பாழாக்குவது தான். பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, பரந்த மனப்பான்மை, தியாகம் இவைதான் நம் வாழ்க்கை.ஆன்மிக வாழ்வாக இருந்தாலும், உலகியல் வாழ்வாக இருந்தாலும், நாம் மனநிறைவையும், அமைதியையும் நாடுகிறோம். அதற்கு ஆணவம் என்ற சுமையை குறைக்க வேண்டும்; எளிமைக்கு பழக வேண்டும்; அன்பை வெளிப்படுத்த வேண்டும். பண்புகளை வளர்க்க வேண்டும். நாம் யாருக்கும், தலை வணங்கத் தயாராக இல்லை. அதனால், இழப்பு நமக்குத்தான். இவ்வுலகில், மனிதனை தவிர அனைத்து உயிரினங்களும் பணிவின் அடையாளங்களே. உடலுக்கு ஊட்டச்சத்து உள்ள உணவு தேவை என்பது போல, மனதிற்கு தினமும் நல்ல எண்ணங்கள் எனும் ஊட்டச்சத்து அவசியம்.இவ்வாறு, மாதா அமிர்தானந்த மயி அருளாசி வழங்கினார்.ஆசிரமத்தில், இரண்டு நாட்களாக ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனை பாடல்கள், தியானம் ஆகியவை நடந்தன. இவற்றில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar